நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட தபால் நிலையங்களை இந்தியா போஸ்ட் கொண்டுள்ளது. தபால் சேவை மட்டும் அல்லாமல் பல்வேறு நிதி சேவைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சேவைகளுக்கும் அதற்கு தகுந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது.
இந்தியா போஸ்ட் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் குறித்து முக்கிய ஐந்து தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம் இந்த திட்டத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அந்த 5 தகவல்கள் இதோ..
1. இந்த திட்டமானது குறைவான அளவில் பணத்தை சேமிக்க விரும்பவர்களுக்கானது. இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் (Joint account) அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
2. இந்த திட்டத்தின் ஆண்டு வட்டி விகிதமானது 6.6 சதவிகிதமாகும்.
Also Read:
Coco Cola vs Ronaldo: பெவிக்காலின் அட்டகாச விளம்பரம்..!
3. நாம் கணக்கு துவங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
4. இந்த திட்டத்தில் டிடிஎஸ் இல்லாததால், பிரிவு 80C கீழ் கிடைக்கும் நன்மைகள் இதில் கிடைக்காது. மேலும் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு.
5. இந்த திட்டத்தில் இணைந்தால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு இது பெரிதும் உதவும். தற்போது
கொரோனா போன்ற கடுமையான சூழலில் பலர் தங்கள் வேலையை இழந்தனர். மேலும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்தது. இதனால் வருமானம் இழந்து அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட வேண்டியிருந்தது.
Also Read:
இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்
மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பல்வேறு தொழில்களும் முடங்கியது. கடைகள் திறக்க முடியாமல் வியாபாரிகள் திணறினர். இத்தகைய நெருக்கடியான நிலையில் மக்களுக்கு சேமிப்பின் அவசியம் புரிந்தது. வங்கிகளில் சேமிப்பு என்பது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. மேலும் குறைந்த அளவிலான பணத்தை சேகரிப்பவர்களுக்கு
இந்திய தபால் துறை வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் பெரிதும் கைகொடுப்பதாக அமைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது. அவை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (போசோ), 5 ஆண்டு
தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி), தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD), தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளிட்ட திட்டங்கள் உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிப்புக் கணக்கை துவங்கி சேமிக்கலாம். மேலும் இந்திய தபால் துறையின் இணையள பக்கத்தையோ, அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.