ஹோம் /நியூஸ் /வணிகம் /

ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

ஏடிஎம்

ஏடிஎம்

கொரோனா தொற்று பரவலின் போது வாடிக்கையாளர்களின் விரும்பத்தை புரிந்து கொண்டு பல தனியார் வங்கிகளும் 'Tap to pay' என்ற தொடர்பில்லாத கார்டு பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தின.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாம் வாழ்வில் பயன்படுத்தும் பெரும்பாலான விஷயங்கள் ஆன்லைனுக்கு மாறி வருகிறது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை பெரும்பாலான விஷயங்கள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்.இ.எஃப்.டி, ஆர்.டி.ஜி.எஸ், யு.பி.ஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் கொரோனா தொற்று பரவலின் போது வாடிக்கையாளர்களின் விரும்பத்தை புரிந்து கொண்டு பல தனியார் வங்கிகளும் 'Tap to pay' என்ற தொடர்பில்லாத கார்டு பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தின.

அதாவது இந்த முறையில், கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதிலாக அவரது போனை டேப் செய்தால் மட்டுமே போதுமானது. டேப் செய்வதன் மூலம் கூகுள் பே செயலிக்கு தானாக சென்று யூபிஐ பின் கேட்கப்படும், தொடர்ந்து யூபிஐ பாஸ்வேர்ட் மட்டும் டைப் செய்தால் பணம் விரைவாக அனுப்பப்படும்.

இதனைத் தவிர சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக கார்டு இல்லாமல் பணம் (card less cash withdrawal) எடுக்க கூடிய வசதியை வழங்குகின்றன. இதுகுறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை கீழே கொடுத்துள்ளோம்.

1. ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது UPI மற்றும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது

2. வாடிக்கையாளர் திரையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI பின்னைப் பயன்படுத்தி அங்கீகரிப்பது.

3. ஏடிஎம் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

4. கார்டு ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் மூலம் ஏற்படும் மோசடிகளையும் இது தடுக்கிறது.

5. தற்போது இந்த சேவையை சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றன.

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆன்லைன் பேங்கிங் சேவைகள் போன்ற டிஜிட்டல் முறை சார்ந்த சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் நீங்கள் எடுக்க நினைக்கும் தொகையை உள்ளீடு செய்தால், பரிவர்த்தனைக்காக QR code உருவாக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர் UPI ஆப்பில் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் பின்னை உள்ளிட வேண்டும். இதன் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பணம் பெறலாம்.

Also see... savings account : சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி இந்த வங்கிகளில் கிடைக்கும்!

ஏடிஎம் கார்டு இல்லாமல் இந்த பணப்பரிவர்த்தனை நடப்பதால் கார்டு ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் போன்ற மோசடிகளில் இருந்தும் தங்களது வாடிக்கையாளர்களை காக்க முடியும் என்பதால், பெரும்பாலான வங்கிகள் இந்த முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் மட்டுமே தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை செயல்படுத்தி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கார்டு இல்லாத பணப்பரிவர்த்தனையை கொண்டு வர பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ATM Card, Banking, Money