இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் எல்லாம் பாக்கெட் மணியாக வாங்கிய கடைசி தலைமுறை இந்த 90ஸ் கிட்டுகளாக தான் இருக்கும். அதற்கு பின் உள்ள சந்ததிகள் எல்லாம் டிஜிட்டல் உலகத்திலேயே பிறந்து, வளர்ந்து, ஊறிக்கொண்டு இருக்கிறது. ஏதாவது வேண்டும் என்றால் அவர்களே அப்பா அம்மாவின் போனை எடுத்து ஆர்டர் போட்டு விடுகின்றனர்.
சிறுக சிறுக சில்லறை சேர்த்து கையில் வைத்து எண்ணி அதை கணக்கு பார்த்து செலவு செய்யும் பழக்கம் எல்லாம் வருவதில்லை. சிக்கனம் , சேமிப்பு பற்றிய கவலைகள் அவர்களிடம் குறைவாக உள்ளது. பெரியவன் ஆனால் எப்படி செலவுகளை ஒழுங்காக கவனிப்பான் என்று கவலை கொண்டிருப்பீர்கள். குழந்தைகளுக்கு செலவு மேலாண்மையை கற்றுக்கொடுக்க 5 தரமான ஆப்ஸ்களை சொல்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி பாருங்கள்.
ஜூனியோ (Junio )
முன்னாள் Paytm மூத்த துணைத் தலைவர் சங்கர் நாத் மற்றும் அங்கித் கெரா ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ஜூனியோ என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட ஸ்மார்ட் கார்டு மற்றும் பேமெண்ட் ஆப்பாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் வாங்க அனுமதிக்கிறது. பாக்கெட் மணியின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட இதை பயன்படுத்த, குழந்தைக்கு வங்கிக் கணக்கு தேவையில்லை.
பெற்றோரின் கணக்கில் இருந்து கிளை கணக்கு போல உருவாக்கப்படுகிறது. செலவு வரம்புகளை பெற்றோர் நிர்ணயிக்க முடியும். தினசரி 5000 வரை பரிவர்த்தனை செய்யலாம். மாதத்திற்கு 1 லட்சம் வரை உச்ச வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தை கார்டைப் பயன்படுத்தும் போது நிகழ்நேர அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு ஆப் அனுப்பும். இதன் மூலம் அவர்களது செலவை கண்காணிக்கலாம். பரிவர்த்தனைகளை வெகுமதியும் வழங்கப்படுகிறது.
ஃபம்பே
FamPay, ஒரு எண்ணற்ற அட்டை. இது சிறார்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் ஆன்லைன் (UPI & P2P) மற்றும் ஆஃப்லைன் மூலம் பணம் செலுத்த பயன்படுத்தக்கூடிய டெபிட் கார்டு . ஐஐடி ரூர்க்கி பட்டதாரிகளான குஷ் தனேஜா மற்றும் சாம்பவ் ஜெயின் ஆகியோரால் 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு கிடைக்கிறது.
ஆப்பில் அனைத்து தகவலும் இருப்பதால் கார்டில் எந்த தகவலும் எழுதப்பட்டிருக்காது. திருடப்பட்டால் அல்லது தொலைந்தால் மற்ற கார்டுகளை போல பிளாக் செய்து சொல்லலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை அனுப்பலாம் மற்றும் அவர்கள் செலவழிக்கும் தொகையைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் குடும்பத்திற்கான குழுக் கணக்கான FamPool கணக்கையும் உருவாக்க முடியும்.
ஸ்லான்கிட் (slonkit)
2010 இல், ஜாவேத் டாபியா மற்றும் முராத் நைதானி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ஸ்லான்கிட் ஆப் இந்தியாவில் குழந்தைகளுக்கான ப்ரீபெய்ட் கார்டுகளின் கருத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாகும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கும் இந்த ஆப் மூலம் மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கு தர விரும்பும் பணத்தை மற்ற பேமெண்ட் ஆப்களில் இருந்து அனுப்பிக்கொள்ளலாம். மேலும் குழந்தையின் செலவினங்களை பகுப்பாய்வு செய்யவும், தினசரி செலவு வரம்புகளை அமைக்கவும் உதவுகிறது.ஸ்லோங்கிட் கார்டில் பெற்றோர்கள் அதிகபட்சமாக மாதம் 10,000 ரூபாய் வரை சேர்க்கலாம்.
Fyp
Fyp என்பது கட்டணச் செயலி மற்றும் இந்தியாவின் முதல் ஹாலோகிராபிக் ப்ரீபெய்ட் கார்டு ஆகும். YES பேங்குடன் இணைந்து கபில் பன்வாரிலால் உருவாக்கிய இது இளம் வயதினருக்கு நிதி மேலாண்மை மற்றும் கருத்துகளை கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதார் அட்டையின் உதவியுடன் பதின்வயதினர் இந்த கார்டுகளை பெற முடியும். பெற்றோர்கள் குழந்தையின் Fyp செலவைக் கண்காணித்து, ஒவ்வொரு முறை செலவு செய்யும் போதும் தொலைபேசியில் நிகழ்நேர விழிப்பூட்டல்களைப் பெறலாம்.
பென்சில்டன் (pencilton)
பென்சில்டன், டீனேஜர்கள் மற்றும் மாணவர்களுக்கு பண மேலாண்மையை கற்றுக்கொள்ள உதவும் மெய்நிகர் RuPay டெபிட் கார்டு. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களான புரேட்டி, ஆஷிஷ் சிங், பல்லவி மற்றும் விராஜ் காடே ஆகியோரால் நிறுவப்பட்டது. பென்சில்டன் செயலி மூலம் நிர்வகிக்கலாம். குழந்தைகள் சேமிப்பு இலக்குகளை அமைக்கலாம், இந்த வேலைளை முடிந்தால் இவ்வளவு பாக்கெட் மணி தருகிறேன் என்பது போன்ற இலக்குகளையும் பெற்றோர் உருவாக்கலாம். அதோடு, பென்சில்டன் பிக்கி பேங்க் மற்றும் பென்சில்டன் டாஸ்க்ஸ் & பேட்ஜ்கள் குழந்தைகளிடம் நல்ல நிதி பழக்கத்தை வளர்க்க உதவுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ATM Card, Children, Payment App