• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஐ.டி. துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் - இன்போசிஸ் இணை நிறுவனர் மோகன்தாஸ் பாய்

ஐ.டி. துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் - இன்போசிஸ் இணை நிறுவனர் மோகன்தாஸ் பாய்

மோகன்தாஸ் பாய்

மோகன்தாஸ் பாய்

இந்திய நிறுவனங்கள் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் 2019-ம் ஆண்டு 5 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இன்போசிஸ் இணை நிறுவனரான மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.

    “2018-ம் ஆண்டு ஐ.டி., துறையில் ஃபிரெஷர்களின் ஆண்டு சம்பளம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஐடி துறையில் மீண்டும் வளர்ச்சி வந்துவிட்டது. அது வரும் ஆண்டுகளிலும் தொடரும். எச்-1பி விசா விதிமுறைகள் நெறிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பக்கம் கவனம் செலுத்தி வருவதாகவும்” மோகன்தாஸ் பாய் கூறினார்.

    இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குநருமான மோகன்தாஸ் பாய் தற்போது மனிபால் குலோபல் எஜிகேஷன் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

    மேலும் பார்க்க: இந்தியாவை தொடர்ந்து அர்ஜென்டினாவை அதிரவைக்கும் #METOO

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: