ஹோம் /நியூஸ் /வணிகம் /

நாளை முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.. செலவு அதிகரிக்க வாய்ப்பு

நாளை முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.. செலவு அதிகரிக்க வாய்ப்பு

காட்சி படம்

காட்சி படம்

ஜூன் மாதம் சில முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது. ஜூன் 2022 முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய நிதி மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.

  மே மாதம் முடிந்து ஜூன் மாதம் துவங்க உள்ள நிலையில் ஜூன் 2022-ல் தொடங்கவிருக்கும் முக்கிய நிதி மாற்றங்கள் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும். அதிகரித்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் முதல் கோல்டு ஹால்மார்க்கிங் வரை ஜூன் மாதம் சில முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது. ஜூன் 2022 முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய நிதி மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.

  SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்:

  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் லெண்டிங் ரேட்டை (EBLR) 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.05 சதவீதமாக உயர்த்தியுள்ளது. RLLR 6.65 சதவிகிதம் மற்றும் CRP-ஆக இருக்கும். திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும். SBI வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் (EBLR) = எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் ரேட் (EBR) + கிரெடிட் ரிஸ்க் பிரீமியம் (CRP). SBI அதன் குறு செலவு அடிப்படையிலான கடன் (bps) விகிதங்களில் மற்றொரு 10-அடிப்படை புள்ளி உயர்வை அறிவித்துள்ளது.

  ஆக்சிஸ் வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்ட் கட்டணம்:

  தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் செமி-அர்பன் / கிராமப்புறங்களில் ஈஸி சேவிங்ஸ் மற்றும் சேலரி ப்ரோகிராம்களுக்கான சராசரி மாத பேலன்ஸ் தேவையை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 அல்லது ரூ. 1 லட்சம் டெர்ம் டெபாசிட் ஆக உயர்த்தியுள்ளது. அதே போல லிபெர்ட்டி சேவிங்ஸ் அக்கவுண்ட்டுக்கான தேவையும் ரூ15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

  கோல்டு ஹால்மார்க்கிங்:

  தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி நடைமுறை வந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டம் ஜூன் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போதுள்ள 256 மாவட்டங்கள் மற்றும் 32 புதிய மாவட்டங்களில் தங்க நகைகள் / கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த 288 மாவட்டங்களில் 14, 18, 20, 22, 23 மற்றும் 24 காரட் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும், மேலும் அவை கட்டாயம் ஹால்மார்க் அடையாளத்துடன் விற்கப்பட வேண்டும்.

  Also Read : சிலிண்டர் மானியத்தில் புதிய விதிமுறை... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் கட்டணங்கள்:

  தனிநபர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய நிதி மாற்றம் ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டமிற்கான (AePS) இஷ்யூயர் சார்ஜஸ் (issuer charges) செயல்படுத்தப்பட்டுள்ளதாகஇந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) கூறியுள்ளது. இந்த கட்டணங்கள் ஜூன் 15, 2022 முதல் செயல்படுத்தப்படும். மாதத்திற்கு முதல் மூன்று AEPS ட்ரான்சேக்ஷன்ஸ், AEPS கேஷ் வித்ட்ராவல், AEPS கேஷ் டெபாசிட் மற்றும் AEPS மினி ஸ்டேட்மென்ட் உட்பட இலவசமாக இருக்கும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கேஷ் வித்ட்ராவல் அல்லது கேஷ் டெபாசிட்க்கும் ரூ.20+ஜிஎஸ்டியும், மினி ஸ்டேட்மென்ட் பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டியும் வசூலிக்கபடும்.

  தேர்ட்-பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியங்களில் உயர்வு:

  புதிய கட்டணங்களின் கீழ், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கானதேர்ட்-பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் 2019-20-ல் ரூ.3,221-ல் இருந்து ரூ.3,416-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1500 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்கள் பிரீமியமாக ரூ.7,890-ல் இருந்து ரூ.7,897-ஆக இருக்கும். இதனிடையே 150 சிசி-க்கு மேற்பட்ட ஆனால் 350 சிசி-க்கு மிகாமல் இரு சக்கர வாகனங்களுக்கு, காப்பீட்டு பிரீமியம் ரூ.1,366-ஆகவும், 350-சிசிக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,804 பிரீமியமாகவும் இருக்கும்.

  1000 சிசிக்கு மிகாமல் இருக்கும் புதிய காருக்கு மூன்றாண்டுக்கான சிங்கிள் பிரீமியம் ரூ.6,521ஆகவும், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான காருக்கு ரூ.10,640-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின் கீழ் 1500 சிசிக்கு மேற்பட்ட புதிய தனியார் வாகனம் ரூ.24,596-க்கு மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷுரன்ஸ் செய்யப்படும். 350

  சிசி-க்கு மேல் உள்ள இரு சக்கர வாகனத்தை ஐந்தாண்டுகளுக்கு ரூ.15,117 என்ற புதிய கட்டணத்தில் இன்ஷுரன்ஸ் செய்யலாம்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Business, Money