உங்களுக்கு கிடைக்கும் வரியை சேமிக்க சூப்பரான 5 முதலீட்டு திட்டங்கள் இதோ!

உங்களுக்கு கிடைக்கும் வரியை சேமிக்க சூப்பரான 5 முதலீட்டு திட்டங்கள் இதோ!

காட்சிப் படம்

உங்களுக்கு கிடைக்கும் வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை இதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
இன்றைய சூழ்நிலையில்  வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்று என்றால் அது பணம் தான்.அந்த பணத்தை நாம் நிகழ்காலத்தில் சிறிதளவு சேமித்தால், அது வருங்காலத்தில் நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.எனவே  உங்களுக்கு கிடைக்கும் வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதற்கான 5 முதலீட்டு திட்டங்கள் இதோ.

 

பொது வருங்கால வைப்புநிதி:

வரியை சேமிக்க நினைப்பவர்களின் பிரதான தேர்வாக இருப்பது பொதுவருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்திய குடிமக்களாக இருக்கும் அனைவரும் தங்களுக்கு அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ, வங்கிகளிலோ PPF சேமிப்புக் கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். இந்த சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு EEE எனப்படும் மூன்று விதமான வரிச்சலுகைகளை வழங்குகிறது. முதலீட்டு தொகை, வட்டி வருவாய், முதிர்வு தொகை என மூன்றுக்கும் இந்த திட்டத்தில் வரிச்சலுக்கை வழங்கப்படுகிறது. சேமிக்கும் பணத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. முன்கூட்டியே எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. திட்டத்தின் நெகடிவ் சைடை பார்த்தால், ஒரே மாதிரியான வட்டி விகிதம் திட்டம் முழுவதும் இருக்காது. காலசூழல்நிலைக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.  

 

பிக்ஸ்டு டெபாசிட், NSC முதலீடு

5 ஆண்டுகளுக்கான பிக்ஸ்டு டெபாசிட் மற்றும் NSC (National Saving Certificate) எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்யலாம். இந்த இரு வழிகளும் மிகச் சிறந்த திட்டங்களாகும். நாடு முழுவதும் இருக்கும் அஞ்சலகங்களில் சென்று தேசிய சேமிப்பு சான்றிதழ்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டு தொகைக்கு 6.8 விழுக்காடு வட்டியை கொடுக்கின்றன. 80c -பிரிவின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கோரமுடியும். வங்கிகளில் சேமிக்கும் பிக்ஸ்டு டெபாசிட்களுக்கு 5 முதல் 6.9 விழுக்காடு வட்டி கிடைக்கிறது. வங்கிகளில் சேமிக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டியை குறிப்பிட்ட காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். NSC முதலீட்டில் வட்டியை இடையில் எடுத்துக்கொள்ள முடியாது. முதிர்வு காலத்துக்கு பிறகு உங்களுக்கான முழுத்தொகையும் கிடைக்கும். பாதுகாப்பான வருவாய், தொகைக்கு ஏற்ப தகுந்த வரி ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்படுகிறது. நெகடிவ் சைடு என்னவென்றால், வட்டி வரி விதிக்கப்படுகிறது.

 

ஈக்விட்டி சேமிப்பு திட்டம்:

ELSS அல்லது ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் என்பது ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆகும். இவை முதலீடு மற்றும் வரிசேமிப்பு என இருவகையான நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தை 3 ஆண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது. வருமான வரியின் 80 சி பிரிவின் கீழ், உங்கள் வருடாந்திர வருமானத்திலிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். SIP எனப்படும் சிஸ்டமேடிக் இன்வெஸ்மென்ட் திட்டத்தை இதன்மூலம் நீங்கள் பெறலாம். வரி சேமிப்பு முதலீடுகளுக்கு 13.72% வரை வட்டி கிடைக்கிறது. ஆபத்து என்று பார்த்தால் நிலையற்ற வருமானமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு இந்த திட்டம் உதவாது.

 

இன்சூரன்ஸ் முதலீடு:

யூனிட் லிங்டு இன்சூரன்ஸ் திட்டம் (Unit linked insurance plan) என்பது ஆயுள் காப்பீடு திட்டங்களுடன் இணைந்து முதலீடு செய்யும் ஆப்சனையும் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் ஸ்டாக்ஸ் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். சந்தை நிலவரப்படி உங்களுக்கான தொகை கிடைக்கும். வரிச்சலுகை தேவைப்படுதவற்கு ஏற்ப ஸ்டாக்ஸ்களில் இருந்து பத்திரங்களுக்கு பரஸ்பர முறையில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி உண்டு.  இந்த திட்டத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உங்களின் முதலீட்டு வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம். குறைந்த பணப் புழக்கம் மற்றும் காப்பீடு அம்சங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது நெகடிவாக பார்க்கப்படுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: