ஹோம் /நியூஸ் /வணிகம் /

வருமான வரி சேமிப்பு எஃப்டிகள்... வட்டி அள்ளிக்கொடுக்கும் டாப் வங்கிகளின் லிஸ்ட்!

வருமான வரி சேமிப்பு எஃப்டிகள்... வட்டி அள்ளிக்கொடுக்கும் டாப் வங்கிகளின் லிஸ்ட்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

5 ஆண்டு நிலையான வைப்புத் தொகை சேமிப்புத் திட்டங்களுக்கு தனிநபர் பிரிவ 80 சி பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரை வரிச்சலுகைப் பெறலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு நிர்ணயித்துள்ள வருமானத்திற்கு அதிகமாக மாத சம்பளம் பெறுவோர்கள் வருமான வரிச்சட்டத்தின் கீழ் நிச்சயம் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில் தான் பெரும்பாலான வரி செலுத்துவோர் வரி சேமிப்பிற்காக சில முதலீடுகளைச் செய்ய முன் வருகின்றனர். ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு கம்பெனிக்கு மாறும்போது அதிக வருமானம் பெற நேரிடும். இதனையடுத்து அதிக வரி செலுத்த வேண்டும் என்றால் வரி விலக்கு உள்ள முதலீடுகளில் தங்களின் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப்பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள், சுகாதார காப்பீட்டு பிரிமியம் என பல சேமிப்புத்திட்டங்கள் வரி செலுத்துவோருக்கு வருமான வரிச்சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ், சில முதலீடுகளுக்கு வரி விலக்குகளை அரசாங்கம் அனுமதிக்கிறது.

Read More : சிறிய முதலீட்டில் பெரிய லாபம்! ரூ.5 லட்சம் முதலீடு செய்து மாதம் ரூ.60,000 வருமானம் பெறுங்கள்

இந்நிலையில 5 ஆண்டு நிலையான வைப்புத் தொகை சேமிப்புத் திட்டங்களுக்கு தனிநபர் பிரிவ 80 சி பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரை வரிச்சலுகைப் பெறலாம். இதோடு இந்த நிதித்திட்டங்கள் தனிநருக்கு வரிச்சலுகையை வழங்கப்போகிறது என்றாலும், முதிர்வு நேரத்தில் இந்த எஃப்டிகள் மீதான வட்டிக்கு TDS பொருந்தும்.

எனவே இந்நேரத்தில் வரி சேமிப்பு எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 5 வங்கிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

டிசிபி வங்கி: டிசிபி வங்கி 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத் தொகைக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சிட்டி யூனியன் வங்கி( City union Bank): சிட்டி யூனியன் வங்கி 5 ஆண்டு வரி சேமிப்பு நிலையான வைப்புத் தொகை கணக்குகளுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
AU சிறு நிதி வங்கி( Au small finance bank): ஏயு சிறு நிதி வங்கியானது 5 ஆண்டு வரி சேமிப்பு நிலையான வைப்புத் தொகை அதாவது எஃப்டிகளுக்கு 6.95 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இண்டூசிண்ட் வங்கி(Indusind bank): 5 ஆண்டுகளுக்கான வரி சேமிப்பு நிலையான வைப்புகளுக்கு 6.75 சதவீதம் வட்டி விகிதத்தை நமக்கு வழங்குகிறது.
யெஸ் வங்கி: 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகை கணக்குகளுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதுப்போன்று பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி வழங்குகிறது என்றாலும் வருமான வரிச்சட்டத்தின் படி ரூ.1. 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Taxi