Home /News /business /

வீடு இல்லாதவர்களுக்கு பட்ஜெட்டில் மகிழ்ச்சி தகவல்... 80 லட்சம் வீடுகள் கட்டப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வீடு இல்லாதவர்களுக்கு பட்ஜெட்டில் மகிழ்ச்சி தகவல்... 80 லட்சம் வீடுகள் கட்டப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அனைவருக்கும் வீடு திட்டம்

அனைவருக்கும் வீடு திட்டம்

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்கும் விதமாக  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (pradhan mantri awas yojanaPMAY) திட்டம் ஜூன் 25, 2015 அன்று செயலுக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன

    2022-23 நிதியாண்டில் பிரதமரின் அனைவருக்கும் வீடு ( PMAY) திட்டத்தின் கீழ் 80 லட்சம் கோடி வீடுகள் கட்டிமுடிக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    நாட்டில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்கும் விதமாக  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (pradhan mantri awas yojanaPMAY) திட்டம் ஜூன் 25, 2015 அன்று செயலுக்கு வந்தது.பிரதமரின் அனைவருக்கு வீடு திட்டம் என்று தமிழகத்தில் பரவலாக கூறப்படும் இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயனாளி ரூ.2.62 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் பிரதமரின் அனைவரின் வீடு திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

    இதையும் படிங்க: பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..


    இதற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 2022-23 நிதியாண்டிற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Nirmala Seetharaman, Prime Minister Narendra Modi, Union Budget 2022

    அடுத்த செய்தி