ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆன்லைன் ஷாப்பிங்கில் இப்படித்தான் ஏமாத்துறாங்க.. - பண்டிகை கால ஷாப்பிங்கில் ஏமாந்த இந்தியர்கள்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் இப்படித்தான் ஏமாத்துறாங்க.. - பண்டிகை கால ஷாப்பிங்கில் ஏமாந்த இந்தியர்கள்!

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

Online Shopping | ஆன்லைன் ஷாப்பிங் வழியாக கிட்டத்தட்ட 40 சதவிகித பயனர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனை அதிகமாகி இருக்கின்றது என்று பல வித அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கோவிட் தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு எல்லா பண்டிகைகளையும் நாடு முழுவதும் மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். வழக்கத்தை விட ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அதிகமான டிமாண்ட் இருந்தது. இந்த ஆண்டு ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மிக அதிக அளவில் நடந்தன. ஆனால், அதே நேரத்தில், ஆன்லைன் ஷாப்பிங் வழியாக கிட்டத்தட்ட 40 சதவிகித இந்தியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

உலகின் முன்னணி ஆன்டி வைரஸ் மென்பொருள் நிறுவனமான நார்ட்டான் சார்பாக ஹாரிஸ் போல் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றிய ஒரு கணக்கெடுப்பின் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. தவறான பொருட்கள் அல்லது சேதமடைந்த பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வழங்குவது, அல்லது டெலிவரி நிறுவனங்கள் செய்யும் தவறுகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆன்லைன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் / கடைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் அல்லது பரிசுகளை விற்பனை செய்யும் போது, ரீஃபர்பிஷ் செய்த பொருட்களை விற்பனை செய்துள்ளது. மற்றும் பரிசாக ஒரு நபர் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, அது சேதமடைந்த பொருளாக அனுப்பப்பட்டுள்ளது.

அதே போல, மொபைல் சாதனங்கள், டிராக்கிங் டிவைஸ்கள் ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளன. பொருட்களை சேதம் செய்வது ஒரு பக்கம் இருக்கையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை வாங்கும் பொழுது, யூசரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்துமே ஹேக் செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் இந்த ஆய்வு வெளியிட்டிருக்கிறது. இதில் தான் கிட்டத்தட்ட ஆன்லைன் ஷாப்பிங் செய்தவர்களில் 40% ஏமாற்றப்பட்டுள்ளனர்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

நார்ட்டான் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஆன ரிதேஷ் சோப்ரா, இதைப் பற்றி கூறுகையில் “சமீபத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதேபோல ஆன்லைன் ஷாப்பிங்கில் ஸ்கேம்கள், பரிசு அட்டை என்று ஏமாற்றும் பேர்வழிகள் மற்றும் டெலிவரி சம்பந்தப்பட்ட ஃபிராடுகள் ஆகியவையும் அதிகரித்துள்ளன” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

ஆன்லைன் ஷாப்பிங் சமீபமாக அதிகரித்துக்கு முக்கிய காரணமாக யூசர்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றம் என்பதை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் விண்டோ ஷாப்பிங் என்று பொருட்களை வாங்காமல் இருப்பது அல்லது பண்டிகை காலத்தில் ஆன்லைனிலேயே எல்லா ஷாப்பிங்கையும் செய்வது என்பது அவர்களுக்கு மன நிறைவாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 74 சதவீத நபர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மனரீதியாக திருப்தி அடைவதாக கூறப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Online Frauds, Online shopping, Tamil News