ஹோம் /நியூஸ் /வணிகம் /

இதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்தால் ரியல் எஸ்டேட் துறையில் பணம் கொட்டும்!

இதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்தால் ரியல் எஸ்டேட் துறையில் பணம் கொட்டும்!

மாதிரி படம்

மாதிரி படம்

Business stratergy | கொரோனா தொற்றின்போது அதல பாதாளத்திற்கு சென்ற ரியல் எஸ்டேட் துறை, இப்போது மீண்டும் துளிர்த்து எழ துவங்கியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய நிலையில் யாரேனும் முதலீடுகள் செய்ய விரும்பினால் அவர்களின் முதல் தேர்வானது ரியல் எஸ்டேட் துறையாக தான் இருக்கிறது.. ஏனெனில் ரியல் எஸ்டேட்டில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களுக்கு கணிசமான லாபம் கண்டிப்பாக கிடைக்கும். ரியல் எஸ்டேட் அல்லது வேறு எதிலும் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் அதில் உள்ள சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு எப்படி லாபம் பார்க்கலாம் என்று தெளிவாக தெரிந்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றின்போது அதல பாதாளத்திற்கு சென்ற ரியல் எஸ்டேட் துறை, இப்போது மீண்டும் துளிர்த்து எழ துவங்கியுள்ளது. இந்த சமயத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய எண்ணி இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை பற்றி பார்ப்போம்.

சொத்து அமைந்துள்ள இடம்:

ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை இருப்பிடம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் நிலம் வாங்கும் போது அல்லது வீடு கட்டும் போதும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பற்றி சற்று யோசிக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் பகுதியானது ரயில் நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை எளிதில் அணுகக்கூடிய இடமாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு மிக அதிகமான வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட கால அடிப்படையில் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

என்ன விதமான சொத்து

நீங்கள் முதலீடு செய்யும் நிலை எப்படி உள்ளது என்பதும், கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நிலத்தில் முதலீடு செய்கிறீர்களா அல்லது கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் முதலீடு செய்கிறீர்களா அல்லது கட்டி முடித்துவிட்டு இடத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பது போன்ற பல விஷயங்கள் உள்ளன. கட்டிடங்கள் கட்டி முடித்த இடத்தை விட, கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு சுமூகமாக இருக்கும். மேலும் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிற இடத்தில் முதலீடு செய்யும் போது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். மேலும் வீட்டுக் கடன் வாங்குவதற்கும், வரி சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும். எனவே இங்கு முதலீடு செய்யப் போகும் சொத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

சொத்தின் விலையை தீர்மானிக்க வேண்டும்:

ஏற்கனவே முழுமை அடைந்த இடத்தில் நீங்கள் முதலீடு செய்யும் போது அதன் மதிப்பை முன்னரே தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வளர்ந்து வரும் இடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது அவை எதிர்காலத்தில் மிக அதிகமான லாபத்தை கொடுக்கும். ஏனெனில் வளர்ந்து வருகிற இடங்களில் எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். ஆனால் அங்கு இடம் வாங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்:

நீங்கள் முதலீடு செய்யும் போது என்ன காரணத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீண்ட கால அடிப்படையில் லாபம் பார்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் இடங்களில் உள்ள சொத்துக்களிலேயே முதலீடு செய்ய வேண்டும். வாடகை அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எளிதாக இருக்கும் இடங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்ய வேண்டும். உங்களது முதலீட்டின் குறிக்கோள் என்னவாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதன் சாதக பாதகங்களை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

First published:

Tags: Business, Business Idea