விரைவில் ஏடிஎம் போன்ற மெஷினில் இருந்து மருந்து பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Web Desk | news18
Updated: July 18, 2019, 8:20 PM IST
விரைவில் ஏடிஎம் போன்ற மெஷினில் இருந்து மருந்து பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: July 18, 2019, 8:20 PM IST
தமிழ்நாடு முழுவதும் 23 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 32 இடங்களில் நோயாளிகளுக்கு மருந்துகளை விநியோகிக்க ஏடிஎம் போன்ற இயந்திரம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகக் காசநோய், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படும். மேலும் இந்த மருந்துகளைப் பெற வேண்டும் என்றால், மருந்து பரிந்துரை சீட்டில் QR குறியீடு இருக்க வெண்டும்.

முதற்கட்டமாக 80 லட்சம் ரூபாய் செலவில், இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக 28 வகையான மருந்துகள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அது மேலும் எளிமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் பார்க்க:

Loading...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...