• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கொரோனா 2ம் அலை அதிக பொருளாதார நிச்சயமற்ற தன்மையைத் ஏற்படுத்தக்கூடும் - நிதி ஆயோக்

கொரோனா 2ம் அலை அதிக பொருளாதார நிச்சயமற்ற தன்மையைத் ஏற்படுத்தக்கூடும் - நிதி ஆயோக்

நிதி ஆயோக்

நிதி ஆயோக்

இந்தியா பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா 2ம் அலை படுவேகமாக பரவிக் கொண்டுள்ளது. இதுவரை சந்திக்காத பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் நாடு சந்திக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4வது நாளாக 2 லட்சத்தை கடந்துள்ளது. ஒரு புறம் நோய்த்தொற்று பரவல் காரணமாக பொருளாதார சறுக்கைலையும் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், கடந்த ஆண்டு பாதிப்பைக் காட்டிலும் தற்போதைய 2ம் அலை கொரோனா பரவல் மிகவும் கடினமாக இருக்கின்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் மனநிலை காரணமாக பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் இருப்பினும் நம்பிக்கைக்குரிய வகையில் 2022 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 11% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதே போல உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது, இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் மக்களின் நடமாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நிலையில் இருந்தது , ஆயினும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா பாதிப்பு தற்போது சூழலை முற்றிலும் மோசமாக்கியுள்ளது.

சேவைத்துறை போன்ற சில துறைகளில் நேரடி பாதிப்பை சந்தித்தாலும் கொரோனாவின் 2ம் அலை பொருளாதார சூழலை அதிக நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக்குகிறது என்பதால், பெரிய அளவிலான நிச்சயமன்ற பொருளாதார சூழலுக்கு நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டம் ஏதேனும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, கொரோனா 2ம் அலையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆராய்ந்த பிறகே இது தொடர்பாக பேச முடியும் என அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: