5 வருடத்தில் 27 பேர் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

வெளிநாடு தப்பிச் சென்றுள்ள 27 நபர்களில் 20 பேரின் மீது இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டிஸ் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள என மக்களவையில் அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 8, 2019, 10:42 PM IST
5 வருடத்தில் 27 பேர் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
விஜய் மல்லையா
Web Desk | news18
Updated: January 8, 2019, 10:42 PM IST
இந்தியாவில் கடன் பெற்றுவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் கடந்த 5 வருடத்தில் 27 வணிகர்கள் மற்றும் பொருளாதார மோசடியாளர்கள் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடு தப்பிச் சென்றுள்ள 27 நபர்களில் 20 பேரின் மீது இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டிஸ் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள என மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறியுள்ளார்.

“இண்டர்போல் ஏற்கனவே 8 நம்பர்கள் மீது ரெட் கார்னர் நோட்டிஸ் வழங்கியுள்ளது, 6 நபர்களைத் திருப்பி ஒப்படைக்கக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்க துறை 27 நபர்களில் 7 நபர்கள் மீது பொருளாதார மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

இங்கிலாந்து நீதிமன்றத்தின் உதவியுடன் விஜய் மல்லையாவை விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்துவோம்.

பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கடனை வழங்கும் போது ப்ரமோட்டர்கள் அல்லது நிறுவன இயக்குனர்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற நிறுவன அனுமதி கையெழுத்துக்களைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்” ஷிவ் பிரதாப் சுக்லா கூறினார்.

மேலும் பார்க்க: உயர்சாதியினரை திருப்திப்படுத்த மத்திய அரசு முயற்சி- கி.வீரமணி
Loading...
First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...