ஹோம் /நியூஸ் /வணிகம் /

சேமிக்க தொடங்குங்கள் மக்களே... 2020ம் ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்!

சேமிக்க தொடங்குங்கள் மக்களே... 2020ம் ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை நிறுத்தினர்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  2020ம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி, சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை உணர்த்தி சென்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  கடந்த ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ், உலகவில் எதிர்பாராத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஏராளமானோர் விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ ஊதிய குறைப்பை  ( Salary reduction) எதிர்கொண்டனர். அன்றாட வருமானத்தை நம்பியிருந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதனால், கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  

  இருப்பினும்அவசர கால நிதி மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாதவர்களுக்கு இந்த காலகட்டம் மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

  குறிப்பாக, ஆரம்பகால கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு, வாடகை உள்ளிட்டவைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால், சரியான பொருளாதார திட்டமிடல் வைத்து சேமிப்பு பழக்கத்தை முறையாக பின்பற்றியவர்கள் கொரோனா காலத்திலும் பொருளாதார நெருக்கடியின்றி( Economic emergency) இருக்க முடிந்தது. இதனால், நீண்டகால முதலீடு திட்டம், சேமிப்பு திட்டங்கள், அவசர கால நிதி ஆகியவற்றை எப்படி சேமிப்பது என்பதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏராளமானோர் சரியான முதலீடு திட்டங்களையும் தேட தொடங்கியுள்ளனர்.

  கொரோனா போன்ற நெருக்கடியான காலங்களை எதிர்கொள்ளும்போது ஒருவர் குறைந்தது 6 மாதங்களுக்கு சமாளிக்கக் கூடிய வகையிலான சேமிப்பை (Savings) வைத்திருக்க வேண்டும். அப்போது, ஏற்கனவே இருக்கும் கடன் சுமை, அவசரகால செலவுகள், அன்றாட குடும்பச் செலவுகள் என அனைத்தையும் எவ்வித சிக்கலுமின்றி எதிர்கொள்ள முடியும். இதனை பின்பற்றியவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தை சிறப்பாக எதிர்கொண்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

  Also read... Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

  சேமிப்பு பணம் இல்லாதவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டதுடன், கிரெடிட் கார்டு மூலமும் (Credit card), தங்களிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்தும் கடன்களை பெற்றுள்ளனர். மேலும், பெரும்பாலானோர் பெற்ற கடன்களை திரும்ப செலுத்துவதற்கு கால நீட்டிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக ஜூலை 2020-ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், கொரோனா ஊரங்கு அறிவிப்பு வெளியான மார்ச் மாதம் முதல் பெரும்பாலானவர்களால் இ.எம்.ஐ கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. தனிநபர் கடன் பெற்றவர்களில் 50 விழுக்காட்டினர் இ.எம்.ஐ கட்டுவதில் இருந்தது விலக்குகோரியதன் மூலம் இது தெரியவந்துள்ளது.

  இதேநிலை பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை நிறுத்தினர். கடினமான பொருளாதாரச் சூழல் நிலவும் நேரத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன், மற்ற நேரங்களைப்போன்று பங்குகளை வைத்திருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் பங்கு நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்தனர். மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் தேவை என்பதையும் இந்தகாலம் உணர்த்தியது. சேமிப்பு பணம் முழுவதும் மருத்துவச் செலவுகளுக்கு செல்வதால், அதனை தடுக்க சரியான ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி (Health policy) வேண்டும் என்பதையும் பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Personal Finance, Savings