பணியில் சேரும் இளம் ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் 18 மணி நேரம் வேலை பார்த்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற கோணத்தில் டாடா நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் சாந்தனு நாயுடு தெரிவித்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிறுவனமோ? அல்லது தனியார் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் 8 மணி நேரம் தான் வேலை என்ற விதி நடைமுறையில் உள்ளது. பல நிறுவனங்கள் தங்களது நிறுவன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் சுமார் 10 மணி நேரம் வரை ஊழியர்களைப் பணியில் அமர்த்துவார்கள். இந்த சூழலில் ஊழியர்களோ? எப்போது பணி நிறைவு பெறும் என மனநிலையில் தான் வேலைப்பார்ப்பார்கள் தவிர வேலையில் சிறிதும் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.
10 மணி நேரம் வேலைக்கே இந்த நிலைமை என்றால் 18 மணி நேரம் வரை வேலைப்பார்க்க சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்ளவார்களா? இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தன் விளைவு தான் மக்களின் கோபம் மற்றும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ளார் டாடா நிறுவனத்தின் மேலாளர் சாந்தனு நாயுடு.. அப்படி என்ன நடந்தது என நாமும் தெரிந்துக் கொள்வோம்.
டாடா நிறுவன உரிமையாளர் ரத்தன் டாடா உடன் நீண்ட காலமாக இணைந்து பயணிப்பவர் தான் சாந்தனு நாயுடு. இவர் டாடா சன்ஸ் சந்திரசேகரனைக் காட்டிலும் அதிக நேரம், அதிக நெருக்கமாக இருப்பவராக இருந்து வந்தார். தற்போது பாம்பே ஷேவிவ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் சுமார் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என கருத்து சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை உருவாகியுள்ளது.
என்ன தான் பணியில் சேர்ந்தாலும், 18 மணி நேரம் பணி என்பதை யாராலும் செய்ய முடியாது எனவும், இது தேவையில்லாத பேச்சு என சோசியல் மீடியாவில் எதிர்மறைக் கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இதோடு சாந்தனு நாயுடுவின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தான் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக சாந்தனு நாயுடு, சோசியல் மீடியாவில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,18 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய கருத்து பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் நான் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு 22 வயதில் நீங்கள் பணிக்கு சேருகிறீர்கள் என்றால், நீங்கள் செய்யும் எந்த வேலையையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
Read more: கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!
இதோடு நன்றாக சாப்பிட்டு உடல் நலத்தையும் நன்றாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் இளம் வயதில் உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வதற்கு பணியில் சேர்ந்த முதல் 5 ஆண்டுகளுக்கு 18 மணி நேரம் வரை பணிபுரியுங்கள். நிச்சயம் இது உங்களுடைய திறனை வளர்க்க உதவும். இதை மனதில் வைத்து தான் பணியில் சேரும் அனைவரும் 18 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். வேறு எந்த மனநிலையிலும் நான் கூறவில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவும் தற்போதும் சோசியல் மீடியாவில் வைரலாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TATA