புகை மாசுபாட்டை மறைத்து மோசடி; ரூ.4,100 கோடி அபராதம் செலுத்தும் போர்ஷே!

வோக்ஸ்வாகனின் துணை நிறுவனமும், ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவும் இதே போன்று புகை மாசுபாட்டை மறைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

புகை மாசுபாட்டை மறைத்து மோசடி; ரூ.4,100 கோடி அபராதம் செலுத்தும் போர்ஷே!
போர்ஷே
  • News18
  • Last Updated: May 8, 2019, 8:10 PM IST
  • Share this:
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே, புகை மாசுபாட்டை மறைத்து மோசடியில் ஈடுபட்டதால் அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

2015-ம் ஆண்டு வோக்ஸ்வாகன் நிறுவனம் டீசல் எஞ்சின் வாகனங்களில் மாசு அளவை குறைத்துக் காண்பிக்க மோசடி கருவியைப் பயன்படுத்தியது அமெரிக்காவில் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விண்ட்டர் கார்ன் பொறுப்பேற்று ராஜினாமாவும் செய்தார்.

இந்நிலையில் வோக்ஸ்வாகனின் துணை நிறுவனமும், ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷேவும் இதே போன்று புகை மாசுபாட்டை மறைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


போர்ஷே டீசல் கார் புகை வெளியேற்றம் குறித்து சோதனை செய்யப்பட்டு மோசடியில் ஈடுபட்டத்தை உறுதி செய்த பிறகு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. விசாரணை முடிவில் மோசடியில் ஈட்பட்டதை ஒப்புக்கொண்ட போர்ஷே மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ₹4,100 கோடியை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.

மேலும் பார்க்க:
First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading