Home /News /business /

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீதான அபராதத்தை குறைத்த டெல்லி உயர் நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் செயற்கை இடுப்பு எலும்பைப் பொருத்திக் கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    டெல்லியில் 4 நபர்கள் ஜான்சன் & ஜான்சன் தயாரித்த பழுதடைந்த செயற்கை இடுப்பு எலும்பைத் தங்களுக்குப் பொருத்தியதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருந்துக் கட்டுப்பாடுகள் ஆணையத்திடம் முறையிட்டனர்.

    இந்தப் புகாரைப் பெற்ற டெல்லி மருந்துக் கட்டுப்பாடுகள் ஆணையம் விசாரணைக்குப் பிறகு நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப ரூ.65 லட்சம், ரூ.74 லட்சம், ரூ.90 லட்சம் மற்றும் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

    ஆனால், இதை எதிர்த்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்வழங்க வேண்டும் என்று அபராதத்தை குறைத்து உத்தரவிட்டனர்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Johnson and johnson

    அடுத்த செய்தி