ஹோம் /நியூஸ் /வணிகம் /

வருமானம் குறையுது.. ஊழியர்களை கொத்தாக வெளியேற்றும் பேஸ்புக்! கலக்கத்தில் 12ஆயிரம் பேர்!

வருமானம் குறையுது.. ஊழியர்களை கொத்தாக வெளியேற்றும் பேஸ்புக்! கலக்கத்தில் 12ஆயிரம் பேர்!

பணி நீக்கம் செய்ய பேஸ்புக் திட்டம்

பணி நீக்கம் செய்ய பேஸ்புக் திட்டம்

15 சதவிகிதம் PIP (செயல்திறன் மேம்பாட்டுத் திட்டம்) இல் வைக்கப்பட்டு, பின் வேளையில் இருந்து விடப்படலாம் என்று ஒரு மெட்டா ஊழியர் தெரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

    உலகளாவிய தலையீடுகள் மற்றும் விளம்பரச் செலவுகள் குறைவதால் மெட்டா பிளாட்ஃபார்ம் பேஸ்புக்கில் "அமைதியான ஆட்குறைப்புகளை" மேற்கொண்டு வருகின்றன.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் சமூக ஊடக வருவாயைக் குறைத்துக்கொண்டிருப்பதால், மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்கில் சுமார் 12,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதாவது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதத்தை குறைக்கிறது.

    கடந்த மாத இறுதியில், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவனம் பணியமர்த்துவதை நிறுத்துவதாகவும், அடுத்த வருடத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை சீராக குறைக்கும் என்றும் அறிவித்தார்.

    ஒரு செய்தி தள இன்சைடர் அறிக்கையின்படி, ஜுக்கர்பெர்க் நிறுவனத்தின் குழுவில் உள்ள இயக்குநர்களிடம், சிறப்பாக செயல்படாத பயிற்சி தேவை படும் 15 சதவீதத்தையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த 15 % நபர்களை தனியாக பிரித்து பயிற்சி அளித்து மீண்டும் சேர்க்க இருக்கின்றனரா அல்லது நீக்க போகிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.

    காதல் கடிதம் தீட்டவே... மேகம் எல்லாம் காகிதம்.. உலக அஞ்சல் தினம் இன்று..!

    "இந்த 15 சதவிகிதம் PIP (செயல்திறன் மேம்பாட்டுத் திட்டம்) இல் வைக்கப்பட்டு விடப்படலாம்," என்று ஒரு மெட்டா ஊழியர் தெரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நடந்த பேஸ்புக் தலைமை நிர்வாகி- ஊழியர்கள் இடையான கேள்வி-பதில் நேரத்தில் நிறுவனத்தின் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் அதை சரி செய்ய பணியாளர்கள் விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்

    பல பெரிய நிறுவனங்கள் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்து வரும் அபாயத்திற்கு மத்தியில் தங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளன. தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஆப்பிள்,மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள், பணியமர்த்தலை நிறுத்தியுள்ளனர். இப்பொது பேஸ்புக் நிறுவனமும் செலவினங்களைக் குறைப்பதற்கும் செயல்பாட்டு வரம்புகளைப் பராமரிப்பதற்கும் பணியாளர்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

    கிரன்ச் பேஸ் எண்ட்ரஸ் நிறுவனம் தொகுத்த தரவுகளின்படி, ஜூலை இறுதி வரை 32,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Facebook, Metaverse