• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தினம் ரூ.5 கோடி நட்டம் - வேதாந்தா

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தினம் ரூ.5 கோடி நட்டம் - வேதாந்தா

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் மூடப்பட்டுள்ளதால் இதுவரை 1,380 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2018-ம் ஆண்டு மே மாதம் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தினம் 5 கோடி ரூபாய் நட்டம் அடைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் மூடப்பட்டுள்ளதால் இதுவரை 1,380 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையில் சில மாற்றங்களைச் செய்தப் பிறகு திறக்கலாம் என அனுமதியளித்தது.

    ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.

    இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை வேதாந்தா நிறுவனம் நாடியது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில் சிக்கல் உள்ள நிலையில் தேர்தல் முடியும் வரை தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காது என்றும் கூறப்படுகிறது.

    வேதாந்தா நிறுவனத்திற்குத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செலவுகள் அதிகரித்து நட்டம் ஏற்பட்டு வருகிறது.

    மறுபக்கம் எடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேதாந்தா திட்டமிட்டு இருந்தது. அதற்குத் தமிழ்நாட்டின் இந்தத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது தடையாக உள்ளது என்றும் வேதாந்தா கூறுகிறது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: