ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய மும்பை டி-மார்ட் நிறுவனர்

ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய மும்பை டி-மார்ட் நிறுவனர்

ராதாகிருஷ்ணன் தமானி

டி மார்ட் எனப்படும் சங்கிலித் தொடர் நிறுவனங்களின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி மும்பையில் ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  டி மார்ட் எனப்படும் சங்கிலித் தொடர் நிறுவனங்களின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி மும்பையில் ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

  தனது சகோதரருடன் இணைந்து இந்த பங்களாவை அவர் வாங்கியுள்ளார்.

  சமீப காலங்களில் வீடு சார்ந்த ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் மிகப் பெரிய தொகை இதுவாகும்.

  தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள மதுகுஞ்ச் எனும் இடத்தில் 2 தளங்களைக் கொண்ட இந்த பங்களா 61,916 சதுர அடி கொண்டதாகும். இந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.724 கோடியாகும். இந்த பங்களாவை வாங்க முத்திரைத் தாள் கட்டணமாக ரூ.30.03 கோடியை ஆர்கே தமானி செலுத்தியுள்ளார்.
  தற்போது அல்டாமவுன்ட் சாலையில் உள்ள பிரித்வி அபார்ட்மென்ட் பகுதியில் தமானி மற்றும் அவரது சகோதரர் வசிக்கின்றனர்.

  இதுவும் தெற்கு மும்பை பகுதியில் மிகவும் மதிப்பு மிகுந்த இடமாகும்.
  இந்த பங்களாவை பிரேம்சந்த் ராய்சந்த் அண்ட் சன்ஸ் குடும்பத்திடமிருந்து வாங்கியுள்ளனர். இதற்கான பத்திரப் பதிவு மார்ச் 31-ம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இந்த பங்களா நாராயண் தபோல்கர் சாலையில் உள்ளது. தெற்கு மும்பையில் மிகவும் ஆடம்பரமான, விலை அதிகம் போகும் குடியிருப்புப் பகுதியாகும் இது . இப்பகுதியில் குடியிருப்புகள் சதுர அடிக்கு ரூ.70,000, 80,000 வரை விலை போகின்றன.

  இந்நிலையில் தமனி ஸ்டாம்ப் டூட்டி மட்டுமே ரூ.30 கோடி செலுத்தியுள்ளார். இது கடந்த மாதம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பங்களாவை மேலும் புனரமைப்பாரா என்பது தெரியவில்லை.
  இந்தியாவில் வாழும் பணக்காரர்களின் 8வது இடத்தில் இருப்பவர் ராதாகிருஷ்ணன் தமானி. இவருடைய அவென்யு சூப்பர்மார்ட், வாத்வா கன்ஸ்ட்ரக்‌ஷனிடமிருந்து  பகுதியில் 2 ஃப்ளோர்களை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் 113 கோடி ரூபாய் மதிப்புடையதாகும்,

  இது போக மேலும் ஒரு 8 ஏக்கர் நிலத்தை போலீஸ் நிலையம் இருக்கும் இடத்தில் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.250 கோடியாகும்.

  ஹுரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் மொத்தம் இந்தியாவில் 209 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இதில் 177 பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

  பங்குச்சந்தையில் இது அவென்யூ சூப்பர்மார்ட் என்ற பெயரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: