Home /News /business /

மக்கள் அதிகம் பயன்படுத்த டோலோ 650 இலவசமாக கொடுக்கப்பட்டதா? நடந்தது என்ன?

மக்கள் அதிகம் பயன்படுத்த டோலோ 650 இலவசமாக கொடுக்கப்பட்டதா? நடந்தது என்ன?

டோலோ 650 மாத்திரை

டோலோ 650 மாத்திரை

Dolo 65 | டோலோ 650 மாத்திரையை மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து உற்பத்திற்கு நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கருத்துகள் கூறப்பட்டு வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உயிர் காக்கும் மருந்துகள் முதல் மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் வாங்க கூடிய காய்ச்சல் தலைவலி மருந்துகள் வரை, பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றன. உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்களும் இருக்கின்றன. தலைவலி, காய்ச்சல் என்றால் உடனடியாக டோலோ 650 மாத்திரை போட்டால் போதும் என்ற அளவுக்கு அனைவரும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு Common drug ஆகும்.

    ஆனால், டோலோ 650 மாத்திரை உற்பத்தியாளர்கள் 1000 கோடி ரூபாய்க்கு மருந்தை உற்பத்தி செய்து மருத்துவர்களுக்கு இலவசமாக அதை வழங்கியுள்ளனர் என்றும், இந்த மாத்திரையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வளவு பெரிய முதலீட்டை செய்துள்ளனர், என்றும் சமீபத்தில் செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதைப் பற்றி உற்பத்தியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

    டோலோ 650 மாத்திரையை மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்து உற்பத்திற்கு நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், இந்த மருந்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாத்திரை நாம் அறிந்தது போல உடனடியாக தலைவலியில் இருந்து நிவாரணம் தருகிறது; உடல் சோர்வு நீக்கவும் உதவுகிறது. இதைத் தாண்டி ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி என்ற அழற்சி எதிர்ப்பு பண்பையும் கொண்டுள்ளது.

    Read More : இனி Swiggy ஊழியர்கள் வேறு நிறுவனத்திலும் வேலை செய்யலாம் - மூன்லைட்டிங் பாலிசி அறிமுகம்.!


    எனவே இதைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று டோலோ 659 மாத்திரை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்று பலவித கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த மாத்திரையைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலுகைகளும் பரிசுகளும் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், FMRAI என்ற மருத்துவ கவுன்சில் இதை பற்றி தகவலறிந்து செய்தியை வெளியிட்டு, உடனடியாக இது சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது.

    மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் அமைப்பின் (FMRAI),சார்பாக சஞ்சய் பரீக், CBDT வழங்கிய ஒரு அறிக்கையை சுட்டிக் கட்டி, டோலோ 650 மருந்து வழக்கத்தை விட அதிகமாக பரிந்துரைக்கப்பட்டதை காட்டியுள்ளார். இது ஊரடங்கு காலத்தில், காய்ச்சல் மருந்தாக பரவலாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    CNBC TV18 வெளியிட்ட அறிக்கையின்படி டோலோ உற்பத்தியாளர்கள் இந்த மாத்திரை பற்றி வெளியான தகவல் என்பது பல ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட தகவல் என்றும், இதில் 14 பிரிவுகள் அடங்கியுள்ளன என்றும், 6000 மேற்பட்ட நபர்கள் பணியாற்றி உள்ளனர் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாத்திரையை விளம்பரப்படுத்துவதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும், சலுகைகளையும் பரிசுகளையும் வழங்கவில்லை என்றும் 1000 கோடி மதிப்புள்ள மருந்தையும் இலவசமாக வழங்கவில்லை என்றும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

    அதுமட்டுமில்லாமல் உற்பத்தி நிறுவனம் புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் சிறு சிறு நினைவு சின்னங்கள் ஆகியவற்றைத்தான் தங்கள் நிறுவனம் சார்பாக வழங்கியதாக தெரிவித்தது. இது சார்ந்த அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஊரடங்கு காலத்தில் கோவிட் தொற்று தீவிரமாக இருந்த போது, இந்த பிராண்டு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள விற்பனையை தான் எட்டியது என்றும், லாபமில்லாத ஒரு மருந்துக்கு 1000 கோடி ரூபாய் முதலீடு செய்வது, மிகப்பெரிய நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும் என்று மைக்ரோ லாப்ஸ் நிறுவனம் இதுவரை வெளியான அறிக்கைகளை சாடியுள்ளது. அதே போல, டோலோ 650 மட்டுமல்லாமல், வைட்டமின் சி, வைட்டமின் மாத்திரைகளும் கூட ஊரடங்கு காலத்தில் அதிகம் விற்பனையாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது மிகவும் தவறான செய்தி என்றும், மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் என்றும், ஃபார்மா துறை மற்றும் மருத்துவர்கள் மீது இருக்கும் மரியாதையை குறைப்பதாகவும், இந்த செய்தி மிகவும் தவறாக வழிநடத்துகிறது என்றும் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India

    அடுத்த செய்தி