Home /News /business /

அதிகரிக்கும் ஆட்சேர்ப்பு - இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள்..

அதிகரிக்கும் ஆட்சேர்ப்பு - இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் வங்கிச் சேவை ஆகியவற்றில் மிக அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2021 - 2022 கால கட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள முதன்மையான 10 தனியார் நிறுவனங்கள் சார்பில் இதே காலகட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் வங்கிச் சேவை ஆகியவற்றில் மிக அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களிலிருந்து பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2020 - 2021 காலகட்டத்தில், முதன்மையான தனியார் நிறுவனங்களில் பணியாளர் தேர்வு மந்தமாக இருந்த போதிலும் கூட ஒரு லட்சம் பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

    ஆனால், இதற்குப் பிறகான காலகட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில், பணியாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    2021 - 2022 காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் 1.07 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த நிறுவனம் 40 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரீடெயில் சூப்பர்மார்க்கெட்டிற்கு அதிகப்படியாகவும், அதற்கு அடுத்து தொலைத்தொடர்புத் துறைக்கும், அதற்கு அடுத்து ஜியோவுக்கும் அதிகமான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், “எங்களது நிறுவனம் இளைஞர்களை பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக 20களில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு பலமுனை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : முகேஷ் அம்பானியின் மகனுக்காக துபாயில் வாங்கப்பட்ட பிரமாண்ட வீடு!

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாஃப்ட்வேர் சேவைகள் சார்ந்த நிறுவனங்களை பொறுத்தவரையில், இதேபோன்று அதிகமான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மாபெரும் சாஃப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் சார்பில், 2021 - 2022 காலகட்டத்தில் 1.04 லட்சம் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளானர். அதற்கு முந்தைய ஆண்டில் 40 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

    புதியவர்கள் மற்றும் திறமையானவர்களை பணியமர்த்துவதன் மூலமாக 2023ஆம் ஆண்டில் தொழில்துறை எந்தவித சிக்கலும் இல்லாமல் செயல்படும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர் தேர்வு பிரிவு அதிகாரி மிலிந்த் லக்காத் தெரிவித்தார்.

    வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள்

    இதேபோன்று வங்கிகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களில் 2021 - 2022 காலகட்டத்தில் பணியாளர் தேர்வு குறைவாக இருந்த நிலையில், மீண்டும் பணிக்கும் ஆட்கள் எடுக்கும் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போதைய ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 61 சதவீதம் அளவுக்கு பணியாளர் தேர்வை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Bank Recruitment, Job, Telecommunications

    அடுத்த செய்தி