Home /News /business /

இனி சமூக வலைதளத்தில் வருமானம் ஈட்டினால் வரி பிடித்தம்.. புதிய வரி விதிப்பு அமல்

இனி சமூக வலைதளத்தில் வருமானம் ஈட்டினால் வரி பிடித்தம்.. புதிய வரி விதிப்பு அமல்

காட்சி படம்

காட்சி படம்

சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.

    இந்தியாவில் வருமான வரியை பொறுத்தவரை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தனி நபர் வருமானம், சம்பளம் வாங்குபவர், நிறுவனங்கள் என்று ஒவ்வொரு வகையான வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.

    குறிப்பிட்ட வரம்புக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எனவே, வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வருமானம் வழங்கும் நிறுவனங்கள் வரி பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையை தான் வழங்கும் பழக்கம் நாடு முழுவதும் உள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகையை, நிறுவனம் / ஊதியம் வழங்குபவர் செலுத்தி விடுவார்.

    உதாரணமாக ஒரு நபர் ஆண்டுக்கு ₹5,00,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் ஆண்டுக்கு அந்த நபர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனமே கணக்கிட்டு அந்த தொகையை மாதா மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையாக பிடித்தம் செய்து, TDS செலுத்தி அதற்கான சான்றிதழை ஆண்டு இறுதியில் வழங்குவார்கள். இதுதான் TDS என்று கூறப்படும் டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ் என்று கூறப்படுகிறது.

    ஏதேனும் காண்ட்ராக்ட், professional கட்டணம் அல்லது சேவைகளுக்கு வெகுமதி பெற்றுக்கொள்ளும் போதும் 10 சதவிகிதம் முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகைதான் வழங்கப்படும். எந்த துறையில் பணியாற்றி அதற்கான வருமானம் வழங்கப்படுகிறதோ அதற்கு ஏற்ற அளவுக்கு வருமான வரி சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

    சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஈட்டும் பணத்துக்கு இனி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது.

    also read : தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நாமினியை சேர்ப்பது எப்படி?

    சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கில் ஃபாலோவர்கள் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு பொருளை அல்லது சேவையை விளம்பரம் செய்யும் பொழுது அதை பார்த்து பலரும் அந்த பொருளை வாங்குவார்கள். அதற்கு கணிசமான ஒரு தொகையும் இலவசமாக பொருளும் வழங்கப்படும். அந்தத் தொகையை இதுவரை வருமான வரியில் சேர்க்காமலேயே கணக்கில் காட்டாமலேயே வந்திருக்கலாம்.சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸ் என்பது மார்கெட்டிங் சம்பந்தப்பட்ட ஒரு துறையாகவே மாறிவிட்டது.

    உதாரணமாக, சமூக வலைத்தளத்தில் பிரபலம் ஒருவர், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்ஃபோனை தனது சோஷியல் மீடியாவில் விளம்பப்படுத்துகிறார். அதைப் பார்த்து பலரும் வாங்குவார்கள். விளம்பரப்படுத்திய போனை அவரே வைத்துக்கொண்டால், போனின் மதிப்பு வருமானமாக கருதப்பட்டு, அதில் 10% தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டும்.

    இதுவே, 17,000 மதிப்புள்ள காஸ்மெட்டிக் நிறுவனத்தின் பொருட்களை அவர் புரோமோட் செய்தால், அதற்கு TDS பிடித்தம் செய்யப்படாது. ஒரு முறை புரோமோட் செய்யப்படும் பொருளின் / சேவையின் விலை ரூ. 20,000 மேல் இருந்தால் TDS பிடித்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே, அமலில் இருக்கும் TDS விதிகள் இனி சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களுக்கும் பொருந்தும்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Income tax, Instagram, Youtube

    அடுத்த செய்தி