முகப்பு /செய்தி /வணிகம் / 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வாராக்கடன்

வாராக்கடன்

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தாலும், கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்துவற்கு பொறுப்பாவர். அவர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு விதங்களில் தொடர்ந்து நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai, India

கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், வசூலிக்க முடியாத வாராக்கடனாக (written off bad loans ) 10 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, அதை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் வாயிலாக கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையில் வசூலிக்க முடியாத மோசமான கடன் விகிதமானது (Written off bad loan) 10,09,511 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வாராக் கடன் தொகையை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடன் எப்படி உருவாகிறது?

தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்கள் என வங்கிகள் பெரியளவில் கடன் வழங்கி வருகின்றன. சில சமயங்களில் இந்த கடனில் ஒரு பகுதிகள் வசூலிக்க முடியாமல் போகின்றது. உதாரணத்திற்கு கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய விஜய மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி என பலரும் தப்பினர்.பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சொத்துகள் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கூகுள் பேயில் அதிக கேஷ்பேக் பெற எளிமையான வழிகள் இதோ!

அவரது சொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டாலும் அது முழுக்கடனையும் அடைக்காது. எனவே அப்போதும் குறிப்பிட்ட தொகை கடன் என்ற நிலையிலேயே இருக்கும். இது மீட்கமுடியாத வாரக்கடனாக மாறிவிடும். இப்படி சேரும் தொகைகளை தான் தள்ளுபடி செய்வார்கள்

கடன் தள்ளுபடி ஏன் நடக்கிறது?

வங்கிகளின் வரவு - செலவு கணக்குகளை சீர் செய்ய இதுபோன்ற நடவடிக்கை வழக்கமாக நடைபெறும். கடன் நிலுவைகளை கணக்கில் வைத்துக்கொண்டே இருந்தால் வங்கி நஷ்டத்தில் ஓடுவது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது வங்கிகளை தங்கள் வாராக்கடன் நிலையை ரிசர்வ்வங்கியிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின் கடன்களை தள்ளுபடி செய்ததாக அறிவிக்கும்.

கடனை எப்போதும் திரும்ப பெற முடியாதா ?

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தாலும், கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்துவற்கு பொறுப்பாவர். அவர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு விதங்களில் தொடர்ந்து நடைபெறும். அவர்கள் மீது வழக்கு தொடரவும் பணத்தை திரும்ப பெறவும் வங்கிகளுக்கு உரிமை உண்டு.

இதையும் படிங்க: Gold Rate | ஒரு சவரன் தங்கம் ரூ.40,000 ஐ கடந்தது... வெள்ளி விலையும் உயர்வு

அதிகாரிகள் பங்கு வகித்தால் ?

கடன் தொகைகள் திரும்ப வராததற்கு வங்கி அதிகாரிகள் காரணமாக இருப்பதற்கு முகாந்திரம் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் வாராக் கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வாராக்கடன் தாண்டி, வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1,32,036 கோடி வாரகடன்கள் உள்பட 6,59,596 கோடி கடன்களை மீட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Bank Loan