ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்யும் Zoho நிறுவனம்!

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்யும் Zoho நிறுவனம்!

சோகோ

சோகோ

இந்த ஆண்டு மட்டும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக வருமானத்தை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் சோகோ நிறுவனம் ( Zoho) கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

  இந்த ஆண்டு மட்டும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக வருமானத்தை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  சோகோலிக்ஸ் இந்தியா எனப்படும் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் அந்த நிறுவனம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் இருப்பு நிலையங்களை திறக்கப் போவதாகவும், அடுத்த ஐந்து வருடத்தில் இவை முழுமையடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாக் செயின் மற்றும் ஏ ஐ (AI) தொழில் நுட்பங்களில் இரண்டு மடங்கு அதிகமாக முதலீடு செய்ய உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

  “சோகோவை பொறுத்தவரை மனிதர்களின் நன்மைக்காகத்தான் தொழில்நுட்பங்களே தவிர, தொழில்நுட்பங்களுக்காக மனிதர்கள் இல்லை. தொழில் நுட்பங்கள் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அனைத்தையும் தாண்டி நம்மால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உணவையும் புதிய சக்தியையும் வடிவமைக்க முடியாது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

  இந்தியாவின் தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்கு பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வரும் நிலையில் அந்த நிறுவனங்களுக்கு தேவையான பல முக்கிய வசதிகளையும் சாஃப்ட்வேர்களையும் வடிவமைத்து, அவர்களுக்கு உதவி வருகிறது சோகோ நிறுவனம். “வணிகத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்று விளம்பரம் செய்யப்பட்ட சோகோ நிறுவனத்தின் “சோகோ ஒன்” என்று மென்பொருள் பல்வேறு முக்கிய உபமென்பொருட்களை ஒன்றாக சேர்த்து வடிவமைக்கப்பட்ட ஒரு “பிசினஸ் சூட்” வகை மென்பொருள் ஆகும்.

  இனி பணம் அனுப்புவது ஈஸி... வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்குவது?

  இதில் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கவும், மேற்பார்வை செய்யவும் தேவையான அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமான மென்பொருட்கள் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. தனியான சிறப்பு கட்டமைப்புகள் எதுவும் இல்லாமலே வெறும் இந்த மென்பொருளை மட்டும் இன்ஸ்டால் செய்தால் அனைத்துவித மேற்பார்வைகளையும் இதன் மூலமே பார்த்துக் கொள்ள முடியும். சோகோவின் இந்த மென்பொருளை கிட்டத்தட்ட உலகம் முழுவதும்  160 நாடுகளை சேர்ந்த 50,000 மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சோகோஒன் மென்பொருளில் 35 மென்பொருட்கள் நிறுவனத்தின் அனைத்துவித வேலைகளையும் நிர்வகிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

  மூன்லைட்டிங்கிற்கு தீர்வு - ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன சிஇஓ

  சோகோ ஒன் மென்பொருளுடன் சேர்த்து சி ஆர் எம் பிளஸ், மனிதவள மேலாண்மைக்கு உதவும் பீப்பிள் என்டர்பிரைஸ் கொலாபிரேஷன் பிளாட்பார்ம், சோகோ வொர்க் பிளேஸ் மற்றும் கணக்குகளுக்கு உதவும் சோகோ புக்ஸ் ஆகியவை வாடிக்கையாளர்களால் அதிக அளவில் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2021 ஆம் ஆண்டு 77 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: IT Industry, Zoho