பெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர் - கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

பெண் நண்பரின் வீட்டின் பால்கனியில் இருந்து இறங்க முயன்று கீழே விழுந்த பாஜக தலைவரை, கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி சந்தர் பிரகாஷ் கீழே இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக துணி அவிழ்ந்துவிட, அவர் கீழே விழுந்து காலில் காயமடைந்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநில பாஜக தலைவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading