பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை திருட்டா? திட்டமா? சந்தேகம் எழுப்பும் தொழிற்சங்கம்

பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை  திருட்டா? திட்டமா? சந்தேகம் எழுப்பும் தொழிற்சங்கம்
  • Share this:


திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவன நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ₹ 1.43 கோடி கொள்ளை குறித்து பெல் தொமுச பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

திருச்சி - தஞ்சாவூர் சாலை திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா சிறப்பு பெற்ற பாரத மிகுமின் நிறுவனம் (பெல் ) அமைந்துள்ளது.


இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வரவு-செலவு, ஊதிய பரிமாற்றத்திற்காக பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. பெல் நிர்வாக அலுவலக வளாகத்தில் (24 பிளாக்) உள்ள வங்கியில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க, எடுத்துவரப்பட்டது. பாதுகாப்பு பெட்டகம் பழுதால் வங்கியின் காசாளர் அறையில் ₹ 1.43கோடி ரூபாயை வைத்திருந்தனர்.

இதை அன்றிரவு 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சில நிமிடங்களில் கொள்ளையடித்து சென்றார்.

தமிழ்நாடு போலீஸ் மட்டுமின்றி பெல் நிறுவன பாதுகாவலர்களின் தொடர் கண்காணிப்பு, 100க்கும் மேற்பட்ட சிசிடிவிக்கள் என பாதுகாப்பு மிகுந்த பகுதியில் தனி நபர் ஒருவர் சிலநிமிடங்களில் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.இது குறித்து பெல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பெல் ஊழியர்கள், பாதுகாவலர்கள் என பலரிடம் விசாரணை நடத்தியும் போலீசாருக்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

வங்கியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், பெல் நிறுவனத்தின் முக்கிய தொழிற்சங்கமான தொமுச பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் நடந்ததது கொள்ளையா? முறைகேடு திட்டமா? என்ற சந்தேகத்தோடு கொள்ளை நடந்தப் போது வங்கி கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் கேள்விக் கணைகளையும் தொடுத்து உள்ளது.

இதன்படி,

1: 31/10/19 இரவு 7:59 மணிக்கு சம்பவம் தொடங்கியது.

2: 20-25 நிமிடங்களில் இரவு சாப்பாட்டு நேரம் ஆட்கள் நடமாட்டம் தொடங்கிவிடும்.

3: 15 நிமிடங்களுக்குள் சம்பவத்தை முடித்துவிடலாம் என்று 100% நம்பிக்கையுடன் சம்பவம் ஆரம்பம்.

4: அலுமினிய ஜன்னல்களின் அனைத்து ஸ்க்ருவும் முன்கூட்டியே கழட்டபட்டுள்ளது.

5: கண்ணாடி ஜன்னலை தாழிடவில்லை.

6: கொள்ளையன் பண பெட்டியை தேடவேயில்லை

7: வங்கி கேஷியர் அறை பூட்டவில்லை

8: இழுக்கும்/தூக்கும் பெட்டி என்பதை தெரிந்து கொள்ளையன் பெட்டியை நகர்த்துகிறான்.

9: முழு இருட்டில் எந்தவித தயக்கமும் / தடுமாற்றமும் இல்லை

10: ₹1,50,00,000 பெட்டியை பூட்டவில்லை.

11: திருடன் பையோடு வருகின்றான்.

12: பணம் வங்கிக்கு வந்ததை வங்கி பதிவேட்டில் வரவு வைக்கவேயில்லை என தகவல்.

13: ஏற்கனவே வங்கியில் ரூ 93,00,000 (இலட்சம்) பணம் வங்கியில் இருக்க எதற்காக ரூ1,50,00,000 வரவைக்கபட்டது.

14: வெறும் கையோடு வந்த திருடன் கையில் 20 வினாடிகளில் ₹.1,50,00,000 எடுக்கிறான்.

15: சம்பவம் செய்த பதட்டமே இல்லாமல் கண்ணாடி ஜன்னலை மூடிவிட்டு செல்கின்றான்.

தொழிலாளர்  சங்கம் சார்பில் எழுப்பபடும் சந்தேக கேள்விகளுடன் கொள்ளையன் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது போலீசாருக்கு மேலும் தர்மசங்கட்டத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தொமுச தொழிற்சங்கம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையெழுத்திட்ட மனுவை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அளித்துள்ளனர்.First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories