”நீங்கள் உறுதி கொடுப்பீர்களா” ? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிசிசிஐ

எந்த விதமான விசா பிரச்னையும் இருக்காது என்று பிசிசிஐ எழுத்துப்பூர்வாமாக உத்தரவாதம் பெற்று தர வேண்டும் என்று நாங்கள் ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்“ என்றார்.

”நீங்கள் உறுதி கொடுப்பீர்களா” ? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிசிசிஐ
பி.சி.சி.ஐ
  • Share this:
2021 டி20 மற்றும் 2023 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் பேட்டியளித்திருக்கிறார்.

வாசிம் காம் கூறியதாவது, ”இந்தியாவில் நடைபெற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க எந்த விதமான விசா பிரச்னையும் இருக்காது என்று பிசிசிஐ எழுத்துப்பூர்வாமாக உத்தரவாதம் பெற்று தர வேண்டும் என்று நாங்கள் ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்“ என்றார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிபந்தனைக்கு பிசிசிஐ நிர்வாகி பதிலடி கொடுத்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பான ஊடுருவல் எதுவும் இருக்காது என்றோ அல்லது போர் நிறுத்த மீறல் எதுவும் நடக்காது என்றோ? பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ? புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா? என்று கூறியுள்ளார்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories