Home /News /automobile /

நாட்டின் டாப் 10 நகரங்களில் 1 லட்சம் EV-க்களை களமிறக்க திட்டமிட்டுள்ள Zypp Electric!

நாட்டின் டாப் 10 நகரங்களில் 1 லட்சம் EV-க்களை களமிறக்க திட்டமிட்டுள்ள Zypp Electric!

 1 லட்சம் EV

1 லட்சம் EV

இந்தியாவின் டாப் டென் நகரங்களில் சுமார் 1 லட்சம் EV-க்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
EV ஷேர்டு மொபிலிட்டி பிளாட்ஃபார்ம் நிறுவனமான Zypp Electric, இந்த நிதியாண்டில் தங்களது வருவாய் சுமார் 5 மடங்கு அதிகரித்து ரூ. 25 கோடியாக இருப்பதாக கூறி இருக்கிறது. தற்போது Zypp Electric டெல்லி-NCR பிராந்தியத்தில் சுமார் 5,000 EV-க்களை கொண்டுள்ளது. மேலும் அடுத்த 18 மாதங்களில் இந்தியாவின் டாப் டென் நகரங்களில் சுமார் 1 லட்சம் EV-க்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Zypp Electric நிறுவனம் தற்போது டெல்லி-NCR, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் சிறந்த மளிகை, மருந்துகள், உணவு மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் பிற விரைவான வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதனிடையே 1 லட்சம் EV-க்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் இலக்கை அடைய பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு (technology and operation) பிரிவில் சுமார் 450 முதல் 500 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் நடப்பு நிதியாண்டில் பல மடங்கு வளர்ச்சி கிடைக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

குருகிராமை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்,கடந்த செப்டம்பரில் ஒரு சீரிஸ் A ஃபண்டிங் ரவுண்டில் சுமார் 7 மில்லியன் டாலர் திரட்டியது. இது முதலீட்டாளர்கள் இந்திய EV துறையில் பெரிய அளவில் ஈடுபடுவதை குறிக்கிறது.
Zypp Electric-ன் இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் குப்தா கூறுகையில், கடந்த ஆண்டு ரூ.5 கோடியாக இருந்த எங்களது வருவாய், இந்த நிதியாண்டில் ரூ.25 கோடியாக ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

ALSO READ |  டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

தற்போதைய மாதாந்திர ரன் விகிதத்தின் படி, எங்கள் நிறுவனம் இந்த ஆண்டை $6mn ARR-ல் முடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களது Zypp Electric தற்போது மளிகை, மருந்து, உணவு மற்றும் இ-காமர்ஸ் ப்ளேயர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட், க்ரோஃபர்ஸ், அமேசான், ரேபிடோ, ஃப்ளிப்கார்ட், ஸ்பென்சர்ஸ், சிட்டிமால், டீல்ஷேர் மற்றும் பல நகரங்களில் உள்ள மற்ற விரைவு வர்த்தக நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இதில் சிறந்த அம்சம் என்னவென்றால் எங்கள் வணிகம் சரியான யூனிட் பொருளாதாரத்தை (right unit economics) இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 10 மடங்கு வளர்ந்தாலும் நேர்மறை பங்களிப்பு வரம்பை பெறுகிறது. எங்களின் EV தொழில்நுட்ப தளத்தின் மூலம் 100k EV-க்களை பயன்பாட்டில் விடுவதால், நாட்டிற்கான சிறந்த மற்றும் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஷேர் மொபிலிட்டி ஆப்ஷனாக (electric shared mobility option) நாங்கள் இருப்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று கூறி இருக்கிறார் ஆகாஷ் குப்தா.

ALSO READ |  Kawasaki பைக் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க உள்ளது... விரிவான விலை பட்டியல் இதோ!

எங்கள் எலெக்ட்ரிக் ஷேர்டு மொபிலிட்டி பிளாட்ஃபார்முடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த விரும்பும் டெலிவரி நிறுவனங்களுடன் சேர்ந்து, B2B மளிகை பொருட்கள் மற்றும் பிற ஹைப்பர்லோகல் டெலிவரி நிறுவனங்களிடையே பிரபலமடைந்து வரும் ஸ்மார்ட் பிளாட்ஃபார்ம் ஒன்றையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி