• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • குறுகிய தொலைவு விநியோகத்துக்கு டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் - யூலு நிறுவனம் அறிவிப்பு!

குறுகிய தொலைவு விநியோகத்துக்கு டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் - யூலு நிறுவனம் அறிவிப்பு!

டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம்

டெக்ஸ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம்

சுமூகமான, மென்மையாக ஓட்டும் அனுபவத்தை உணரும் வகையில் யூலு டெக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
யூலு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில், முன்னணி உணவு மற்றும் பொருட்களின் விநியோகஸ்தர்களுடன் இணைந்து, 10,000 யூலு டெக்ஸ் யூனிட்களை சந்தைப்படுத்தப்பட உள்ளது.

யூலு, நாட்டின் மிகப்பெரிய ஈ-மொபிலிட்டி சேவை வழங்கும் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது யூலு-டேக் என்ற கஸ்டமைஸ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாகனங்கள், குறைவான தொலைவுள்ள டெலிவரி சேவைகளுக்கு, உணவு, மருந்து, உட்பட, பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது அதிகரித்து வரும் எரிபொருள் விலையை சமாளிக்க, எலக்ட்ரானிக் வாகனங்கள் மிகச்சிறந்த மாற்றாக இருக்கிறது. இந்நிலையில், குறுகிய தொலைவு டெலிவரிக்கு பயன்படுத்தக்கூடிய யூலு டெக்ஸ் எலக்ட்ரிக் டூவீலர் பலருக்கும் பயன் தரும் வகையில் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூலு நிறுவனம் அறிக்கையின் படி, இந்த யூலு டெக்ஸ் வாகனம் அடக்க விலையில் கிடைக்கும். எரிபொருள் விலையின் காரணமாக, டிரைவிங் இல்லாமல் இருப்பவர்கள் மற்றும் தங்களுக்கென்று வாகனங்கள் வாங்க முடியாதவர்கள் என்று பல தரப்பினருக்கும் இந்த யூலு டெக்ஸ் இரு சக்கர வாகனம் பயனளிக்கும். இந்த ஆண்டு, டிசம்பர் இறுதிக்கும், முதல் யூனிட்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், யூலு நிறுவனம், தங்களின் பரவலான நெட்வொர்க் ஸோன்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மத்தியதர வகுப்பில் மற்றும் குறைவான வருமானமுள்ள ஊழியர்களுக்கு யூலு நிறுவனம், குறைந்த நேரத்தில், அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்குகின்றது.

இந்த வாகனத்தின் வடிவமைப்பும் ஊழியர்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சுமூகமான, மென்மையாக ஓட்டும் அனுபவத்தை உணரும் வகையில் யூலு டெக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன இயங்கும் செலவுகள் 35% முத்கல் 40% வரை குறைவாக இருக்கும் என்று யூலு கூறுகிறது. டெலிவரி சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு, லாபம் பெறக்கூடிய டெலிவரி விருப்பங்களை வழங்குவதோடு, நிறுவனங்களின் ESG இலக்குகளை அடையவும் உதவி செய்கின்றது.

Also read... அறிமுகத்துக்கு முன்பே தொடங்கிய முன்பதிவு: ஹோண்டா அமேஸ் காரின் அம்சங்கள் என்ன?

மேலே குறிப்பிட்டுள்ளது போல, யூலு டெக்ஸ் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்பதால், 85% எக்கானமி ஊழியர்கள் தற்போது கிடைக்கின்றனர். எனவே, தற்போது டெலிவரி சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் டெலிவரியில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் எளிதாக தவிர்க்கப்படும்.

யூலு டெக்ஸ் விவரக்குறிப்புகள்:

ரேன்ஜ் – 60 கிமீ

பேட்டரி – லித்தியம் ஐயன்

அதிகபட்ச ஸ்பீட் – 25 கிமீ/ மணி நேரம்

எடை கொள்ளளவு திறன் – 12 கிலோ

யூலு பைக், துணை நிறுவனர் அமித் குப்தா, “மொபிலிட்டியில் முன்னணியில் இருக்கும் நாங்கள், இப்போது, ஷார்ட் மைல் டெலிவரி சேவைகளையும் வழங்க, நிறுவனத்தில் விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எகானமி பெரிதாக வளர்ந்து வரும் இந்நேரத்தில், இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இரண்டு சக்கர வாகனம் வாங்கும் வசதி இல்லாததால், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில்லை. உயர் தர, எலக்ட்ரானிக் இரு சக்கர வாகனமான யூலு டெக்ஸ், கிக் எகானமி தொழிலாளர்களுக்கு, குறைந்த விலையில், பாதுகாப்பான எலக்ட்ரானிக் வாகனத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: