• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

car stunt

car stunt

கடந்த ஏப்ரல் மாதம் மலம்புழாவில் உள்ள ஒரு அணைக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது

  • Share this:
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்களின் அதிக ஆதரவை பெறவும், அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெறவும் பலர் எண்ணற்ற வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர். அதில் சிலர் நகைச்சுவையாக சில விஷயங்களை செய்து காட்டி தங்களது வியூஸ்களை அதிகரித்து வருகின்றனர். ஆனால் சிலர் உயிருக்கு ஆபத்தான சில அபாயகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓடும் ரயிலுக்கு அருகில் நடந்தபடி வீடியோ எடுப்பது, காட்டு விலங்குகளுக்கு அருகில் சென்று வீடியோ எடுப்பது போன்ற அதிபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் கேரளாவின் மலம்புழாவில் நிகழ்ந்துள்ளது. அங்கு உள்ள சில vloggers நியூ மஹிந்திரா தார் வாகனத்தில் அமர்ந்துகொண்டு சில கார் ஸ்டண்ட்களை முயற்சி செய்துள்ளனர். அவர்களது ஸ்டண்ட் பார்வையாளர்களை ஈர்த்ததோ இல்லையோ ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து வ்லாகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மலம்புழாவில் உள்ள ஒரு அணைக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், சில வலைப்பதிவாளர்கள் (vloggers) தங்கள் ஸ்டண்டிங் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், மஹிந்திரா தாரை ஓட்டுபவர் வேண்டுமென்றே காரை திருப்பும் போது மிக வேகமாக ஓவர்டர்ன் செய்துள்ளார்.மேலும், அவர் மாறி மாறி எஸ்யூவியை கவிழ்த்தார். இந்த ஸ்டண்ட் காட்சிகளை மற்றொரு வாகனத்தில் அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டிருந்த மற்ற வலைப்பதிவாளர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அது சட்ட அமலாக்கத்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

car stunt


இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைபடி வெளியான அறிக்கையில், தாரை கவிழ்த்த Vlogger மிக அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாகவும், வீடியோ பதிவு செய்யப்பட்ட அணைக்கட்டு பகுதி தடை செய்யப்பட்ட பகுதி பட்டியலைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள காவல்துறை, கேரள ஆர்டிஓ மற்றும் நீர்வளத் துறை போன்ற பல சட்ட அமலாக்கத்துறைகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. மேலும், அனுமதியின்றி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனத்தை மாற்றியமைத்ததற்காக RTO அதிகாரிகள் ஏற்கனவே Vlogger-களுக்கு ரூ.10,500 அபராதம் விதித்துள்ளதாக  தெரிகிறது.

Also Read: இனி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கேட்டால் திரையில் எழுத்துக்கள் தோன்றும் – செம்ம அப்டேட்!

இந்த நிலையில், நீர்வளத் துறையின் புகாரைப் பெற்று கேரள ஆர்டிஓவும் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. எனினும், இது போன்ற சம்பவம் கவனத்துக்கு வருவது இது முதல் முறை அல்ல. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெரிசல் மிக்க நகர சாலைகளில் ஸ்டண்ட் நிகழ்த்தும் ஒரு ட்ரெண்ட் சமீபத்தில் அதிக புகழ் பெற்று வருகிறது. மேலும் இணையம் முழுவதும் இதுபோன்ற வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன.

மஹிந்திரா தார்


இதேபோன்ற ஒரு நிகழ்வில், ஒரு பைக் ரைடர் தனது வாகனத்தை விபரீதமான முறையில் ஓட்டி ஸ்டண்ட் செய்வதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ எப்படியோ கேரள ஆர்டிஓ அதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல, தற்போது அந்த நபரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி கிரீன் பங்க்46 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கேரளாவில் ஒரு தெருவில் ஒரு பைக்கர் குழுவினர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றனர். அதில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் லேன் விதிகளைப் பின்பற்றுகையில், ஒருசிலர் மட்டும் ஆபத்தான ஸ்டண்டுகளை செய்வதைக் காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: