உங்கள் வாகனங்களுக்கு PUC சான்றிதழ் இல்லையா? ஆர்.சி புக் பறிமுதல் செய்ய வாய்ப்பு!

உங்கள் வாகனங்களுக்கு PUC சான்றிதழ் இல்லையா? ஆர்.சி புக் பறிமுதல் செய்ய வாய்ப்பு!

மாதிரி படம் (Reuters)

வாகன ஓட்டுனர்கள் பலர் தங்களது பயணத்தின் போது வாகனங்களின் ஆவணங்களை எப்போதும் எடுத்துக் கொண்டு செல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வாகனத்தின் PUC சான்றிதழை புதுப்பிக்கவோ அல்லது சரியான நேரத்தில் காப்பீட்டை புதுப்பிப்பு செய்திருக்க மாட்டார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
போக்குவரத்து வாகனங்களுக்கான விதிகள் மற்றும் விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், தற்போது மாசு கட்டுப்பாட்டு (Pollution Under Control -PUC) சான்றிதழுக்கான புதிய விதியும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள் பலர் தங்களது பயணத்தின் போது வாகனங்களின் ஆவணங்களை எப்போதும் எடுத்துக் கொண்டு செல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வாகனத்தின் PUC சான்றிதழை புதுப்பிக்கவோ அல்லது சரியான நேரத்தில் காப்பீட்டை புதுப்பிப்பு செய்திருக்க மாட்டார்கள்.

இதனை முற்றிலுமாக தடுக்க ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதேபோல பி.யூ.சி முறையையும் ஆன்லைனில் எடுத்துச் செல்ல சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், தற்போது சில கடுமையான விதிகளையும் அறிவித்துள்ளது. ஜனவரி 2021 முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாதது வாகனத்தின் பதிவு சான்றிதழை (ஆர்.சி) பறிமுதல் செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் பி.யூ.சி முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்பு மற்ற பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது. இந்த செயல்முறை முழுமையாக செயல்பட இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஜனவரி 2021 முதல் நடைமுறைக்கு வந்தால், எந்தவொரு வாகனங்களின் PUC சான்றிதழையும் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். 

அதேபோல வாகனத்தின் உரிமையாளருக்கு PUC சான்றிதழை புதுப்பிக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்த காலத்திற்குள் புதுப்பிக்க தவறினால் குறிப்பிட்ட நபரின் வாகன பதிவு சான்றிதழ் அதாவது ஆர்.சி புக்  பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அமைப்பில், வாகன உரிமையாளர் தொடர்பான தகவல்கள் மோட்டார் வாகன தரவுத்தள சேவையகங்களுக்கு புதுப்பிக்கப்படும். இதன்மூலம் செல்லுபடியாகும் பி.யூ.சி சான்றிதழ் இல்லாமல்  வாகனங்களை பொதுவெளியில் ஓட்டுவது கடினமாகும். 

Also read... காற்று மாசை குறைக்க உதவும் சிறந்த மின்சார கார்கள்!

இதற்காக வாகனத்தின் உரிமையாளர் அவர்களின் மொபைல் எண்களை வழங்க வேண்டும். அதில் அவர்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவார்கள். உரிமையாளர் OTPஐ வழங்கிய பின்னரே PUC மையத்தில் உள்ள பணியாளர்களும் ஒரு படிவத்தை உருவாக்க முடியும். போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவதன் வாய்ப்புகளை குறைக்க இந்த புதிய அமைப்பு மற்றும் நடைமுறை அமலுக்கு வருகிறது. மேலும்,  ஒருவரின் வாகனத்தில் கூடுதல் புகைகள் வெளியேறுவதை போக்குவரத்து அதிகாரிகள் கண்டறிந்தால், அவர்களின் வாகனங்களை மீண்டும் சோதிக்க நேரிடலாம். 

த்தகைய வாகனங்களை சரிசெய்ய உரிமையாளர்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வாகனத்தை பழுது பார்க்கவில்லை என்றால் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். வணிக வாகனங்களுக்கும் இதே விதிகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று குறைந்து வருவதால், காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக அபாயகரமான நிலைகளை எட்டியுள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published: