• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது "Yezdi" ரோட்கிங் பைக்குகள்!

மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது "Yezdi" ரோட்கிங் பைக்குகள்!

Yezdi

Yezdi

தனது ரெட்ரோ-தீம் மோட்டார்சைக்கிள்களை பிரத்யேக விற்பனை சேனல் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
வாகன ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புகழ்பெற்ற Yezdi பைக்குகள் தற்போது மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது. ஆனால், ஐகானிக் மோட்டார்சைக்கிள் பிராண்டான Yezdi இனி ஜாவா மோட்டார்சைக்கிள்களின் ஒரு பகுதியாக இருக்காது. அதற்கு பதிலாக, Yezdi தனி பிராண்டாக செயல்படும் என்று ஒரு வலைதள பதிவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Yezdi மோட்டார் வாகனத்தின் இந்த கம் பேக் இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகும்.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் கிளாசிக் லெஜெண்ட்ஸில் முதலீடு செய்ததிலிருந்து, JAVA மோட்டார்சைக்கிள்ஸ், BSA மற்றும் Yezdi போன்ற சின்னச் சின்ன பிராண்டுகளின் மறுபிரவேசம் மற்றும் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிளாசிக் லெஜெண்ட்ஸ் இந்தியாவில் யெஸ்டி ரோட்கிங்கிற்கான வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்திருந்தது. இது Yezdi மோட்டார்சைக்கிள்களின் மறுபிரவேசம் பற்றிய யூகத்தை அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் ஜாவா ஏற்கனவே தனது ரெட்ரோ-தீம் மோட்டார்சைக்கிள்களை பிரத்யேக விற்பனை சேனல் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​Yezdi-யும் அதன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இருப்பினும், வெளியீடு விவரங்கள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், Yezdi இந்திய சந்தையில் ரெட்ரோ-தீம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு புதிய சாகச மோட்டார் சைக்கிள் 2022ம் ஆண்டில் Yezdi பிராண்டின் கீழ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.



இதுதொடர்பாக கிளாசிக் லெஜெண்ட்ஸின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா சமீபத்தில் வெளியோட்ட ட்வீடில் குறிப்பிட்டிருந்ததாவது, “ஒரு காலத்தில் நாங்கள் மற்ற சகோதரரை அழைத்து வந்தோம். தற்போது, Yezdi ஒரு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். இருப்பினும், ஜாவாவுடனான அதன் பிரிவினை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Also read... ஓலா EV டெஸ்ட் ரைடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

இதற்கிடையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த புதன்கிழமை ஒரு வித்தியாசமான புகைப்படத்தை டீவீட்டை செய்திருந்தார். அதில் வெளிச்சம் கொண்ட மேம்பால புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அது ஒரு Y போல் தெரிந்தது. மேலும் புராணக்கதை திரும்பியது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் “என் மனதில் #Y என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, புராணக்கதை மீண்டும் வந்துவிட்டது! #YezdiForever" என்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருந்தார்.



தற்போது ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் யெஸ்டியின் ஒரு பகுதியாக இருக்காது என்று அறிவித்த அதே நேரத்தில், Yezdi சொந்தமாக ஒரு பிரத்யேக சமூக ஊடக தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நிறுவனம் பதிவிட்டுள்ள முதல் செய்தி பிராண்டின் மறுபிரவேசத்தை பற்றியதுதான்.



அறிமுகமான பிறகு, ஜாவா மோட்டார்சைக்கிள்களைப் போலவே, யெஸ்டியும் ராயல் என்ஃபீல்டுடன் ரெட்ரோ-தீம் அடிப்படையில் கால் லிட்டர் பிரிவில் வலுவாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழமையான யெஸ்டி பைக்குகளுக்கு இந்தியாவில் பெரும் ரசிக பட்டாளம் இருக்கிறது. விற்பனை நிறுத்தப்பட்டாலும், இந்த பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பதை காண முடியும். இந்த நிலையில், ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய பைக் பிராண்டுகளை இந்தியாவில் களமிறக்க மஹிந்திரா நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவது வாகன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: