கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் எது தெரியுமா? ஆட்டோமொபைல் குறையை கூர்ந்து கவனித்து வரும் அனைவர்க்கும் இது எளிமையான கேள்வியாக இருக்கும். ஏனென்றால் நிச்சயமாக இதற்கான பதில் அவர்களுக்கு தெரிந்திருக்கும். நடப்பாண்டில் இந்தியாவில் நடந்த கார் சேல் ரேஸில் ஜெயித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம் தான். பல ஆண்டுகளை போல இந்த ஆண்டும் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது மாருதி சுசுகி. இதற்கு உதாரணம் கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ள டாப் 10 கார்களில், 7 கார்கள் மாருதி சுசுகிக்கு சொந்தமானது.
இந்த 7 கார்களில் வேகன் ஆர், ஸ்விஃப்ட், ஈகோ, பலேனோ, எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஆல்டோ ஆகியவை அடங்கும். மற்ற 3 கார்கள் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகும். மாருதி சுசுகியின் பெரும்பாலான கார்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்கு கீழும் கிடைப்பதால் தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாருதி சுசுகியின் நடப்பாண்டு சாதனைக்கு முக்கிய காரணமாக இருப்பது அந்நிறுவனத்தின் Wagon R தான். ஏனென்றால் ஜனவரி - நவம்பர் 2021 வரை சுமார் 1,64,123 யூனிட்டுகளுக்கு மேல் இந்த வாகனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க | இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?
கடந்த 2019-ல் Wagon R அப்டேட் செய்யப்பட்டது. இது 1.0 லிட்டர் யூனிட்டுடன் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், கே-சீரிஸ் எஞ்சினையும் பெற்றது. புதுப்பிக்கப்பட்ட Wagon R ஒரு AMT ஆப்ஷனையும், CNG-யையும் பெற்றது. மேலும் இது மக்களுக்கு மிகவும் பிடித்தமான வாகனமாக உள்ளது. இவ்வாகனத்தினுள் தாராளமாக இடம் கொடுக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. சில போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க தொகுப்பாக இது இருக்கிறது என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தவிர மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ இரண்டும் வருடத்தில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையையும் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, மாருதி சுசுகி கடந்த ஆண்டில் புத்தம் புதிய செலிரியோவைத் தவிர வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் 2022-ல் புதிய கார்களை அறிமுக செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1
இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் இரண்டாவது பெரிய நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் Hyundai Creta 2021-ஆம் சிறந்த விற்பனையான தயாரிப்பாக மாறியுள்ளது. டாடா மோட்டார்ஸைப் பொறுத்தவரை, நெக்ஸான் எஸ்யூவி சிறப்பான விற்பனையை தந்தது. அதே போல இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனமான Tigor EV-யும் நல்ல விற்பனை அளவை எட்டி இருக்கிறது. உள்நாட்டு பிராண்டான மஹிந்திராவுக்கான நல்ல விற்பனை அளவை பெற்று தந்தது அதன் பொலிரோ. அடுத்த ஆண்டு சிறந்த விற்பனை பட்டியலில் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளின் வெளியீடு மாதாந்திர அடிப்படையில் மாற கூடும். ஆனால் விற்பனை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாருதி சுசுகி தன் இடத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்றே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.