முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்

சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்

நாட்டில் அதிகம் விற்பனையாகி வரும் 110 cc ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஜூபிடர் முக்கியமானது.

  • Last Updated :

இந்தியாவில் டூ வீலர்களில் ஸ்கூட்டர் செக்மென்ட் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. கியரை எப்படி பயன்படுத்துவது என்ற தயக்கமின்றி பயன்படுத்த கூடியதாக இருப்பதால் அனைத்து வயதினரும் ஸ்கூட்டரை விரும்புகிறார்கள். ஒரு வீட்டில் இருக்கும் இருவர் டூ வீலர் வைத்திருந்தால் அதில் ஒரு டூ வீலர் ஸ்கூட்டராக இருந்து வருகிறது. தவிர ஸ்கூட்டர்களில் கொடுக்கப்படும் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஃப்ளோர் போர்டுகள் போன்ற அம்சங்கள் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல உதவும் என்பதாலும் ஸ்கூட்டர்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே மலிவு விலை ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில நாட்களில் 2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவில் ரூ.70,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டர்களை இங்கே பார்க்கலாம்.

டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter):

நாட்டில் அதிகம் விற்பனையாகி வரும் 110 cc ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஜூபிடர் முக்கியமானது. மேலும் இந்தியாவில் டிவிஎஸ் லைன்அப்-பில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விலை இந்தியாவில் ரூ.68,401 என்ற விலையில் தொடங்குகிறது. இது 5 வேரியன்ட்களிலும் 13 கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.டிவிஎஸ் ஜூபிடரின் டாப் வேரியன்ட் விலை

ரூ. 78,595 ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 7bhp மற்றும் 8Nm பீக் டார்க்கை உருவாக்கும் 109.7cc BS6 எஞ்சின் உள்ளது. ஃப்ரன்ட் & பேக் டிரம் பிரேக்குகளுடன், இந்த ஸ்கூட்டர் 2 வீல்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமுடன் (combined braking system) வருகிறது. இந்த ஜூபிடர் ஸ்கூட்டரின் எடை 107 கிலோ மற்றும் 6 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது.

ஹீரோ பிளஷர் ப்ள்ஸ் (Hero Pleasure+):

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டர் 5 வேரியன்ட்களிலும், 9 கலர்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் டாப் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 73,775 ஆகும். இந்த ஹீரோ பிளஷர் + ஸ்கூட்டர் 110.9cc BS6 எஞ்சின் மூலம் இயங்குகிறது. மேலும் இது 8 bhp பவரையும், 8.7 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. ஃப்ரன்ட் & பேக் டிரம் பிரேக்குகளுடன், இந்த ஸ்கூட்டரும் 2 வீல்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமுடன் (combined braking system) வருகிறது. இந்த Hero Pleasure + ஸ்கூட்டர் 104 கிலோ எடை மற்றும் 4.8 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது.

Also read... 2022-ல் அறிமுகமாக உள்ள சிறந்த ப்ரீமியம் பைக்குகளின் லிஸ்ட் இதோ!

ஹோண்டா டியோ (Honda Dio):

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டராக இருந்து வருகிறது ஹோண்டா டியோ. 3 வேரியன்ட்களிலும் 8 கலர்களிலும் கிடைக்கிறது ஹோண்டா டியோ. இதன் டாப் வேரியன்ட் விலை ரூ.74,217 ஆக உள்ளது. ஹோண்டா டியோ 109.51cc BS6 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

Also read... ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்...

இந்த எஞ்சின் 7.65 bhp பவரையும், 9 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. முன் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், ஹோண்டா டியோ இரு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமுடன் வருகிறது. 105 கிலோ எடை மற்றும் 5.3 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது இந்த டியோ ஸ்கூட்டர்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் (Hero Maestro Edge):

top videos

    இந்த ஸ்கூட்டர் 5 வேரியன்ட்களிலும் 8 கலர்களிலும் கிடைக்கிறது, இதன் டாப் வேரியன்ட் விலை ரூ. 73,730 ஆகும். இந்த Hero Maestro Edge ஸ்கூட்டர் 110.9cc BS6 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 8 bhp பவர் மற்றும் 8.75 Nm டார்க்கை உருவாக்குகிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் எடை 112 கிலோ மற்றும் 5 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது.

    First published:

    Tags: Automobile