ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்...

ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்...

ஸ்கூட்டர்

ஸ்கூட்டர்

எப்போதும் பிரபலமான ஸ்கூட்டராக இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவாவின் 6ஜி மாடல் ஸ்கூட்டரின் துவக்க விலை இந்தியாவில் ரூ.70,348 ஆக இருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியா உலகளவில் டூவீலர்களுக்கான மிக பெரிய சந்தையாக உள்ளது. டூவீலர்களில் கியர் வண்டிகளை விட இயக்குவதற்கு எளிதாகவும் மற்றும் குறைந்த தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும் இருந்து வருகின்றன ஸ்கூட்டர்கள். மேலும் இப்போது பெண்களும் எளிதில் இயக்கும் வகையிலும், பல வசதிகளுடனும் எண்ணற்ற ஸ்கூட்டர்கள் வந்து விட்டன. ரூ.1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் நீங்கள் சிறந்த ஸ்கூட்டர்கள் வாங்க விரும்புகிறீர்களா.? அப்படி என்றால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே பாருங்கள்..

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G):

எப்போதும் பிரபலமான ஸ்கூட்டராக இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவாவின் 6ஜி மாடல் ஸ்கூட்டரின் துவக்க விலை இந்தியாவில் ரூ.70,348 ஆக இருக்கிறது. இது 4 வேரியன்ட்கள் மற்றும் 8 கலர்களில் கிடைக்கிறது. இதன் டாப் வேரியன்ட் விலை ரூ. 73,600 ஆகும். இந்த ஸ்கூட்டர் 109.51cc BS6 என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 7.68bhp பவரையும், 8.79Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. ஃப்ரன்ட் & பேக் டிரம் பிரேக்குகளுடன், இந்த ஸ்கூட்டர் 2 வீல்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் எடை 107 கிலோ மற்றும் 5.3 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125):

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் ஃப்யூயல்-ஃபில்லர் கேப் இருக்கிறது, அதில் 2-லிட்டர் க்ளவ் பாக்ஸ் மற்றும் மொபைல் சார்ஜர் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் 32-லிட்டர் பூட் ஸ்பேஸில் 2 ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட்களை வைக்குமளவிற்கு இடத்தை பெற்றுள்ளது. புதிய TVS Jupiter 125 ரூ.73,400 என்ற விலையில் கிடைக்கிறது. ஸ்டீல் வீல்ஸ், அலாய் வீல்ஸ் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட 3 வேரியன்ட்களில் டிவிஎஸ் ஜூபிடர் 125 கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் 124.8cc ஏர்-கூல்டு ஃப்யூயல்-இஞ்செக்ட்டட், சிங்கிள் சிலிண்டர் 2-வால்வு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இந்த எஞ்சின் 6500 rpm-ல் மிதமான 8.04bhp ஆற்றலையும், 4500 rpm-ல் ஆரோக்கியமான 10.5nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.

யமஹா ரே ZR 125 (Yamaha Ray ZR 125):

இந்த ஸ்கூட்டர் சமீபத்தில் அதன் லேட்டஸ்ட் அப்டேட்டில் ஒரு ஹைபிரிட் சிஸ்டமுடன் அறிமுகமானது. இது 7 வேரியன்ட்களிலும் 17 கலர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் விலை ரூ.85,857. Yamaha Ray ZR 125 ஸ்கூட்டர் 125-cc BS6 என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8.04bhp ஆற்றலையும் 9.7 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த ஸ்கூட்டர் 99 கிலோ எடை, 5.2 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது.

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125):

இந்த ஸ்கூட்டர் 2 வேரியன்ட்களிலும், 5 கலர்களிலும் கிடைக்கிறது. இதன் டாப் வேரியன்ட் ரூ.89,529 என்ற விலையில் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 124cc BS6 என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8.58bhp ஆற்றலையும்,10nm டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் எடை 110 கிலோ மற்றும் 5.5 லிட்டர் ஃப்யூயல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது.

Also read... விற்பனை துவங்கிய 2 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்... ராயல் என்ஃபீல்டு சாதனை

அப்ரிலியா ஸ்டோர்ம் 125 (Aprilia Storm 125):

இந்த ஸ்கூட்டர் ஏப்ரிலியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் மிகவும் மலிவான விலை கொண்ட மாடலாகும். இது 124.45cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 9.78 bhp மற்றும் 9.6 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. ஃப்ரன்ட் & பேக் டிரம் பிரேக்குகளுடன், இது 2 வீல்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமுடன் வருகிறது. இதன் துவக்க விலை ரூ.85,400-ஆக இருக்கிறது.

First published:

Tags: Two Wheeler