Home /News /automobile /

இந்தியாவில் சிறந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் சிறந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்

 எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக் கார்களில் சில விலை அதிகமாக இருந்தாலும், பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் சற்றே குறைந்த விலை கொண்ட EV-க்களையும் விற்று வருகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் காணப்படும் வரலாறு காணாத உயர்வு காரணமாக பலரின் கவனம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மற்றும் கார்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. மேலும் காற்று மாசை குறைத்து சுற்றுப்புற சூழலை மேம்படுத்த வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் electric Vechile revolution-ஐ இந்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் சில விலை அதிகமாக இருந்தாலும், பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் சற்றே குறைந்த விலை கொண்ட EV-க்களையும் விற்று வருகின்றனர்.

Tata-வின் Tigor EV:

300 கிமீ-க்கும் அதிகமான ஆல்-எலெக்ட்ரிக் ரேஞ்சில் (all-electric range) இரு தனித்தனி எலெக்ட்ரிக் வாகனங்களை ரூ.15 லட்சத்தில் வழங்கும் இந்தியாவின் ஒரே கார் தயாரிப்பு நிறுவனமாக சமீபத்தில் மாறி இருக்கிறது டாடா மோட்டார்ஸ். Tigor EV-யானது நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சப்-4-மீட்டர் காம்பாக்ட் செடான் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.11.99 லட்சமாக இருக்கிறது. 3 வேரியன்ட்களில் வருகிறது Tigor EV. இதன் டாப்-ஸ்பெக் மாடலின் விலை ரூ.12.99 லட்சம் ஆகும், இது 306 கிமீ எலெக்ட்ரிக் ரேஞ்சில் மிகவும் மலிவு விலையில் இருக்கும் EV ஆகும். இது 5.7 வினாடிகளில் 0 - 60 கிமீ வேகத்தை எட்டும். 55 kW பவர் மற்றும் அதிகபட்சமாக 170Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது.

டாடா நெக்ஸான் EV (Tata Nexon EV):

மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் அடுத்ததாக டாடாவின் நெக்ஸான் EV இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் மிகவும் மலிவு விலை எலெக்ட்ரிக் எஸ்யூவி-யாக வருகிறது. இதன் கடும் போட்டியாளரான MG ZS EV காரை விட கிட்டத்தட்ட ரூ.6 - ரூ.7 லட்சம் வரை மலிவானது டாடா நெக்ஸான் EV. இந்த எலெக்ட்ரிக் காரில் 30.2 kWh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. டாடா நெக்ஸான் EV காரானது 129PS பவரையும், 245Nm டார்க்கையும் வழங்குகிறது. மேலும் ஃப்ரன்ட்டில் பர்மெனென்ட் மேக்னட் சின்க்ரனஸ் மோட்டரை (Permanent Magnet Synchronous Motor) கொண்டுள்ளது.

ALSO READ |  சர்வீஸின் போது iPhone-களில் எந்த பார்ட்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.... விவரங்களை காட்டும் புதிய அம்சம்!

எம்ஜி இசட்எஸ் EV (MG ZS EV):

இந்தியாவில் MG-ன் இரண்டாவது தயாரிப்பான இந்த எலெக்ட்ரிக் காரின் ஒரு மோட்டார் அதற்கு தேவையான ஆற்றலை 44.5kWh, லிக்விட்-கூல்டு லித்தியம்-அயன் பேட்டரியிலிருந்து எடுக்கிறது.இந்த காருக்கு அதிகபட்சமாக 340கிமீ ரேஞ்சை உறுதியளிக்கிறது MG நிறுவனம். இந்த மோட்டார் 143bhp மற்றும் 353Nm டார்க்கை வெளியிடுகிறது. இது வெறும் 8.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric):

இந்த கார் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த முதல் மற்றும் சரியான எலெக்ட்ரிக் SUV ஆகும். இந்த காரின் மோட்டார் 134.14bhp பவர் 394.91 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கிறது. கோனா எலக்ட்ரிக் 39.2-கிலோவாட்-ஹவர் லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி பேக்கை பெறுகிறது. இது 452 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric Cars

அடுத்த செய்தி