2021ம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது அதற்குள் நாம் ஆண்டின் இறுதியை எட்டிவிட்டோம். மேலும் இந்த ஒரு ஆண்டில் வாகன தொழில்துறையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 2021ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து எலக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.
அதிலும் எலட்ரிக் ஸ்கூட்டர்கள் பல ஆண்டு காலமாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கடந்த ஆண்டில் இருந்து தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான விருப்பம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய சந்தையில் இயங்கி வரும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் பற்றி விரிவாக காண்போம்.
OLA எலக்ட்ரிக் S1 மற்றும் S1 Pro
OLA எலக்ட்ரிக் இந்த ஆண்டு தனது முதல் ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.181 கிலோமீட்டர் வரம்புடன், S1 ஸ்கூட்டர் எக்ஸ்ஷோரூம் விலையில் ரூ.99,999-க்கும், S1 ப்ரோ ரூ.1,21,999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டர் மூன்றே வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 750W போர்ட்டபிள் சார்ஜருடன் வருகிறது மற்றும் அதன் 2.9kWh பேட்டரியை ஆறு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். OLA இன் முன்மொழியப்பட்ட ஹைப்பர்சார்ஜ் நெட்வொர்க் மூலம், ஸ்கூட்டரை வெறும் 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பிள் ஒன்
ஓலா ஸ்கூட்டரின் முக்கிய போட்டியாளரான சிம்பிள் ஒன், பெங்களூரை தளமாகக் கொண்ட சிம்பிள் எனர்ஜியின் ஸ்கூட்டர் ஆகும். இது ஓலா ஸ்கூட்டரின் பேட்டரியை விட சக்திவாய்ந்த 4.8kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்கூட்டரை eco மோடில் பயன்படுத்தினால், 236 கிலோமீட்டர் வரம்பை வழங்கும். ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.09 லட்சம் ஆகும். ஸ்கூட்டரின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அதன் பேட்டரி சார்ஜ் செய்யும் நோக்கத்திற்காக நீக்கக்கூடிய ஒரு பகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தியா சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஸ்கூட்டர்களின் விவரம்:
ஏதர் 450X
இந்த எலக்ட்ரிக் வாகனம் 116 கிலோமீட்டர் வரம்புடன், எக்ஸ்ஷோரூம் விலைப்படி ரூ.1.32 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏதர் 450X ஆனது மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். வெறும் 3.3 வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 2.61kWh பேட்டரியைக் பெற்றுள்ளது. 450X பேட்டரியை சுமார் 3 மணிநேரம் 35 நிமிடங்களில் 80% சார்ஜ் செய்துவிடலாம் என்று Ather நிறுவனம் கூறியுள்ளது.
பஜாஜ் சேடக் எலக்ட்ரிக்
இந்த ஸ்கூட்டரின் அர்பேன் வகைக்கு ரூ.1.42 லட்சம் மற்றும் அதன் பிரீமியம் வகைக்கு ரூ.1.44 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.9 kWh பேட்டரியுடன், ஸ்கூட்டர் eco மோடில் 95 கிலோமீட்டர் வரம்பை வழங்குகிறது. ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் மற்றும் அதன் லித்தியம்-அயன் பேட்டரி ஏழு ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வாகன உற்பத்தியாளர் கூறியுள்ளார்.
டிவிஎஸ் ஐகியூப்: (TVS iQube)
இந்த ஸ்கூட்டர் 75 கிலோமீட்டர் வரம்பையும், மணிக்கு 78 கிமீ வேகத்தையும் வழங்குகிறது. எக்ஸ்ஷோரூம்படி, TVS இன் iQube விலை ரூ. 1.15 லட்சமாகும். ஸ்கூட்டர் 1.4 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது, இதன் பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் 80% சார்ஜ் செய்ய முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Electric car, New Year