ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

யமாஹா நிறுவனத்தின் YZF-R15 V4 பைக் உதிரி பாகங்கள் விலையுடன் அறிவிப்பு!

யமாஹா நிறுவனத்தின் YZF-R15 V4 பைக் உதிரி பாகங்கள் விலையுடன் அறிவிப்பு!

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0

யமாஹாவைப் பொறுத்தவரை வழக்கமான மாடல்களில் இருந்து மாறுபட்ட, கூடுதல் செயல்திறன் பெற்ற பைக்குகளை எம் வரிசை பெயர் கொண்டு அழைப்பதுபோலவே, இந்த பைக்குகளுக்கும் எம் வரிசை பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

அண்மையில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்த யமாஹா நிறுவனம், அந்த பைக்குகளுக்கு தேவையான உதிரி பாகங்களின் விலைப்பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

யமாஹா மோட்டார் இந்தியா, அண்மையில் புதிதாக தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. R15 V4 மற்றும் R15M என இரு பைக்குகளும், க்விக் ஷிப்பட்டர், யூஎஸ்டி ஃபோர்க், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என யமாஹா தெரிவித்துள்ளது.

புதிய YZF-R15 பைக் ஃபேரிங் மற்றும் விண்ட்ஸ்கிரீன் சேர்க்கப்பட்டு LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், இருபுறமும் ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய YZF-R7 மாடலின் தோற்றத்தை R15 நினைவூட்டுகிறது என்றாலும், பின்புறத்தில் R15 V3.0 மாடலில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. ஆனால் பெரிய ஏர் டக்ட்ஸ் எக்ஸாஸ்ட் மஃப்ளர் மற்றும் ரைடருக்கான கால் வைக்கும் முறைகளும் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

யமாஹாவைப் பொறுத்தவரை வழக்கமான மாடல்களில் இருந்து மாறுபட்ட, கூடுதல் செயல்திறன் பெற்ற பைக்குகளை எம் வரிசை பெயர் கொண்டு அழைப்பதுபோலவே, இந்த பைக்குகளுக்கும் எம் வரிசை பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. புதிதாக வந்துள்ள ஆர்15 எம் வேரியண்டில் நீல நிற சக்கரங்கள், வித்தியாசமான இருக்கை கவர் மற்றும் தங்க நிறத்தில் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிராக்‌ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் ஆகியவை சிறப்பான பெர்ஃபானெஸை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 வி 4 மற்றும் ஆர்15 எம் என இரண்டிலும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு SOHC ஃபியூயல் இன்ஜெக்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை அதிகபட்சமாக 18.4 பிஎச்பி பவரையும், 14.2 என்எம் டார்க்கையும் வழங்கும். வேரியபிள் வால்வு ஆக்ஷன் (VVA) உடன் இந்த எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. விலையைப் பொறுத்த வரை 1.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Also read... உண்மையில் மேம்படுத்தப்பட்ட Hornet 2.0 பைக்காக இருக்கிறதா Honda CB200X? - விவரம் இதோ!

இந்நிலையில், யமாஹா நிறுவனம் தற்போது YZF-R15 V4 பைக்கின் உதிரிபாகங்களுக்கான விலைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கான YZF-R15 V4 -க்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அழகுசாதன பாகங்கள் 190 ரூபாய் முதல் 1,650 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த பைக்கின் டேங்க் கவர் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் மிகக் குறைந்த விலை. ப்ளூ பினிஷ்டு அட்ஜெட்டபிள் கிளட்ச், பிரேக் லீவர்ஸ் 950 ரூபாய்க்கு கிடைக்கும். கிளட்ச் லிவர் கார்டு 900 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கிட் பிளேட் 550 ரூபாய் விலைக்கும், சீட் கவர் 490 ரூபாய்க்கும் கிடைக்கும். யு.எஸ்.பி சார்ஜர் விலை ரூ.750. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை, யமாஹாவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் சென்று, தாங்களாகவே புக்கிங் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

First published:

Tags: Yamaha