யமஹா நிறுவனம், சென்னை இருங்காட்டுக்கோட்டையில் ‘தி கால் ஆஃப் தி ப்ளூ’ டிராக் தினத்தை ஏற்பாடு செய்து தந்தது. இதில் அந்நிறுவனத்தின் ரசிகர்கள், அபிமானிகள் பந்தய டிராக்கில் யமஹா பைக்குகளை ஓட்டி மகிழ்ந்து மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுச் சென்றனர்.
‘தி கால் ஆஃப் தி ப்ளூ’ பிராண்ட் உத்தியின்படி, யமஹா இந்தியா நிறுவனம், சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் தனது யமஹா வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே நிகழ்வை நேற்று ஏற்பாடு செய்தது.
யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரேஸ் டிராக்கில் சவாரி செய்யும் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த அனுபவமிக்க சவாரி நடத்தப்பட்டது. பொதுச் சாலைகளுக்கு மாறாக பந்தயப் பாதையில் சவாரி செய்வதில் உள்ள பல்வேறு அளவுருக்கள் மற்றும் வேறுபாடுகள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட யமஹா ரசிகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் யமஹாவின் அற்புதமான, ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்ஸ் மாடல்களின் செயல்பாட்டைக் காண இருங்காட்டுக்கோட்டை MMRT-ல் கூடியிருந்தனர். இதற்கான ஆன்லைன் பதிவுகள் முன்னதாகவே பெறப்பட்டிருந்தன.
YZF-R3, YZF-R15, MT-15, FZ ரேஞ்ச் மற்றும் AEROX 155 போன்ற யமஹா ரேஞ்ச் பைக்குகளுடன் சுமார் 200 வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுடன் அனுபவமிக்க டிராக் ரைடில் பங்கேற்றனர்.
இந்த டிராக் ரைடில் பங்கேற்றவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கியதுடன், அவர்கள் பந்தய ஓடுதளத்தில் பைக்கை எவ்வாறு ஓட்டுவது? பாதுகாப்பு அறிவுரைகள், பைக் ஓட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய உடல் மொழி உள்ளிட்ட ஆலோசனைகளை யமஹா நிறுவனத்தின் நிபுணர்கள் அவர்களுக்கு கற்றுத்தந்தனர்.

Yamaha
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பந்தய பாதையில் குறிப்பிட்ட சில Lap-களை நிறைவு செய்தவர்கள் இது குறித்து பேசுகையில், இந்த அனுபவம் தங்களுக்கு மிகவும் புதியது எனவும், பொதுவான சாலைகளில் பைக்குகளை ஓட்டியிருந்தாலும், இது போன்ற பாதையில் உயர்திறன் கொண்ட யமஹாவின் பைக்குகளை ஓட்டிய போது அந்த பைக்கின் உண்மையான திறனை அறிந்து கொள்ள முடிந்தது எனவும், இந்த அனுபவம் தங்களின் நினைவுகளை விட்டு என்றென்றும் நீங்காது எனவும், தங்களுக்கு மிகவும் பயன் தந்ததாகவும் இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் ரைட் சூட்டில், யமஹா பைக்குகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களை வருகை தந்தவர்களுக்கு நினைவுப் பரிசாக அளித்து வாடிக்கையாளர்களுடனான தொடர்பை யமஹா நிறுவனம் பலப்படுத்தியுள்ளது.
ட்ராக் டே நிகழ்வானது, யமஹா தனது உலகளாவிய இமேஜை ஒரு வலுவான பந்தய பாரம்பரியத்துடன் ஒரு அற்புதமான பிராண்டாக நிலைநிறுத்துவதற்கான பல நிலைகளில் ஒன்றாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.