முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / Yamaha mileage challenge: மைலேஜ் சேலஞ்சில் அசத்திய யமஹா ஸ்கூட்டர்கள்..

Yamaha mileage challenge: மைலேஜ் சேலஞ்சில் அசத்திய யமஹா ஸ்கூட்டர்கள்..

யமஹா

யமஹா

யமஹாவின் எரிபொருள் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மைலேஜை அடைவதற்கு மட்டுமல்லாமல் பணத்தை மிச்சப்படுத்தவும் பெரிதளவு உதவுகின்றன. 

  • 1-MIN READ
  • Last Updated :

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற யமஹா மைலேஜ் சேலஞ்ச் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின்  சிறந்த மைலேஜ் குறித்து வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியுடன், இந்தியா யமஹா மோட்டார் (IYM) சனிக்கிழமையன்று, செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான Samukh Bikes இல் ‘மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சியை’ ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வில்  மொத்தம் 15 யமஹா வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல் வரம்பில் Fascino 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் ஆகியவை அடங்கும். தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், யமஹாவின் எரிபொருள் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மைலேஜை அடைவதற்கு மட்டுமல்லாமல் பணத்தை மிச்சப்படுத்தவும் பெரிதளவு உதவுகின்றன.

இந்த நிகழ்வின்போது ஒவ்வொரு பங்கேற்பாளரின் ஸ்கூட்டரிலும் எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டது.  எரிபொருளை ஏற்றிய பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர்களை அடையாளம் காணப்பட்ட பாதையில் 30 கிலோமீட்டர்கள் வரை ஓட்டி சென்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் 24 நகரங்களில் இனி இ-பஸ் சேவை... களமிறங்கியது கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம்!

அப்போது, வாகனங்களின்  சஸ்பென்சன்,, பிரேக்கிங், ஆக்ஸிலரேஷன் மற்றும் ஆரம்ப பிக்-அப் ஆகியவை  பரிசோதனை செய்யப்பட்டன. போட்டி தொடங்கிய இடத்திற்கு வாகனம் திரும்பிய பிறகு எரிபொருள் டேங்க் மீண்டும்  நிரப்பப்பட்டு  மைலேஜ் கணக்கிடப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு இலவச வாகன 10-புள்ளி சோதனை, இலவச வாட்டர் வாஷ் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவையும் வழங்கப்பட்டன. திருமதி. வரலட்சுமி, திரு. ஜெய் கணேஷ், திரு.நந்தகுமார் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். முதல் 3 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Fuel Price, Yamaha