ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

100வது ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை திறந்த யமஹா.. ப்ளூ ஸ்கொயர் என்றால் என்ன?

100வது ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை திறந்த யமஹா.. ப்ளூ ஸ்கொயர் என்றால் என்ன?

ப்ளூ ஸ்கொயர்

ப்ளூ ஸ்கொயர்

“விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தியில் சிறப்பான மைல் கல்லை எப்படிப் பிடிக்க இந்தியா முழுவதும் இந்த ஷோரூமை திறந்துள்ளோம்”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யமஹா நிறுவனம் தனது 100வது ப்ளூ ஸ்கொயர் ஷோரூமை வெற்றிகரமாக திறந்துள்ளது. 

  யமஹா நிறுவனம் தனது பிரீமியம் பிராண்ட் பைக்குகள் மற்றும் அதற்கான உதிரிப்பாகங்களை விற்பனை செய்ய உருவாக்கப்பட்டதே இந்த ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள். 2012ஆம் ஆண்டில் “கால் ஆஃப் தி ப்ளூ” எனற விளம்பர உத்தியை யமஹா நிறுவனம் கையிலெடுத்தது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் “ப்ளூ ஸ்கொயர்” ஷோ ரூம்களை திறக்கும் வேலையை தொடங்கியது.

  ப்ளூ ஸ்கொயரில் யமஹாவின் பிரிமியம் பிராண்ட் வாகனங்களை மட்டுமே இருக்கும். தனது பிரிமியம் பிராண்ட் வாகனங்களை விற்பனை மார்க்கெட்டிங் செய்யவே இந்த ஷோ ரூம்களை பிரத்யேகமாக அமைத்து வருகிறது யமஹா.

  யமஹா ரேசிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஸ்டைலிஷான ஸ்கூட்டர்கள் மீது பிரியம் கொண்டவர்களுக்காகவே இந்த ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், யமஹா ரைடர்கள் கம்யூனிட்டிக்கள் இதில் இணைந்து கொள்ளலாம். ரைடர்களுக்காக யமஹா நடத்தும் விழாக்களில் இந்த ரைடர்கள் பங்கேற்பார்கள். இதன் மூலம் சக யஹமா விரும்பிகளுடன் நட்புறவு கொள்ள முடியும்.

  இப்படியான இந்த ப்ளூ ஸ்கொயரின் 100வது ஷோரூமை யமஹா நிறுவனம் திறந்து வைத்துள்ளது. இது குறித்து யமஹா நிறுவன சேர்மேன் இஷ்ஹின் சிஹானா கூறுகையில், “இந்த ஷோரூம்கள் சர்வதேச அளவில் யமஹா ரேஸிங் பிரியர்களை அதிகப்படுத்தும் என நம்புகிறோம். விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தியில் சிறப்பான மைல் கல்லை எப்படிப் பிடிக்க இந்தியா முழுவதும் இந்த ஷோரூமை திறந்துள்ளோம்” என தெரிவித்தார்.

  இந்த ப்ளூ ஸ்கோயர் ஷோரூம்கள் இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், மேற்குவங்கம், பிகார், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளன.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Yamaha, Yamaha bike