ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Yamaha FZ-X: கிளாசிக் லுக்கில் நியூ யமஹா FZ எக்ஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

Yamaha FZ-X: கிளாசிக் லுக்கில் நியூ யமஹா FZ எக்ஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

நியூ யமஹா FZ எக்ஸ்

நியூ யமஹா FZ எக்ஸ்

தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

யமஹா நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் லுக்கில் யமஹா எப்.இசட் எக்ஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

70களின் பிற்பகுதியில் வந்த திரைப்படங்களில் வரும் கிளாசிக் பைக்குகளின் லுக்கைப் போல், யமஹா நிறுவனம் யமஹா எப்.இசட் எக்ஸ் பைக்கை உருவாக்கியுள்ளது. லுக் பார்ப்பதற்கு கிளாசிக்காக இருந்தாலும், தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா எப்.இசட் எக்ஸ் பைக், எப்.இசட் எக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் FZ X ப்ளூடூத் இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்தியாவில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியோ ரெட்ரோ டிசைனில் இருக்கும் இந்த பைக்கின் FZ-X ப்ளூடூத் வேரியண்ட் விலை ரூ. 1.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பைக்கை புக் செய்பவர்களுக்கான டெலிவரி இந்த மாதம் முதல் தொடங்கும் என தெரிவித்துள்ள யமஹா நிறுவனம், மேட் காப்பர், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ நிறங்களில் கிடைக்கும் என்றும், வாடிக்கையாளர்கள் இவற்றில் தங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. ப்ளூடூத் வசதிக் கொண்ட FZ X பைக் 1.19 லட்சம் ரூபாய் என விலை யமஹா கூறியுள்ளது.

புதிய மாடலான இந்தப் பைக்கில் ப்ளூடூத் வசதி இடம்பெற்றுள்ளது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் பைக்கை இணைத்து வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் செல்போன் மூலம் அறிந்து கொள்ள முடியும். எஞ்சின் கோளாறு, பைக் பார்க் செய்யப்பட்டிருக்கும் இடம், செல்லும் இடம், மைலேஜ் விபரம், பேட்டரி மற்றும் எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் செயலியில் தெரிந்து கொள்ளலாம். எஞ்சினைப் பொறுத்த வரையில், 149 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் வசதிக் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 12 பிஎச்பி மற்றும் 13.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

Also read... Toyota: டொயோட்டா அறிவித்துள்ள அட்டகாசமான சலுகைகள்: நீங்கள் வாங்கும் வாகனங்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி பெறலாம்!

இந்த பைக்கில் பெஸ்ட் சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ-ஷைக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பெஸ்ட் பிரேக்கிங் வசதிக்காக முன்பக்க வீலில் 282 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. லுக்கில் ஹை குவாலிட்டியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர்-ட்ராப் ப்யூவல் டேங்க், ஒற்றை துண்டு அமைப்புடைய ஹேண்டில் பார், மிருதுவான இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் எஃப்இசட் எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலாக யமஹா எப்.இசட் எக்ஸ் புக்கிங் செய்யும் 200 வாடிக்கையாளர்களுக்கு யமஹா நிறுவனத்தின் இலவச கைக்கடிகாரம் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Yamaha