யமஹா ’சிக்னஸ் ரே’ ஸ்கூட்டரின் புதிய எடிஷன் அறிமுகம்!

யமஹா ’சிக்னஸ் ரே’ ஸ்கூட்டரின் புதிய எடிஷன் அறிமுகம்!
யமகா சிக்னஸ் ரே
  • News18
  • Last Updated: July 16, 2018, 6:55 PM IST
  • Share this:
யமஹா நிறுவனம் 'சிக்னஸ் ரே'  ஸ்கூட்டரில் புதிய எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘ஸ்ட்ரீட் ரேலி’ என்று யமஹா நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதன் விலை 57, 898 ரூபாய். மேலும் இந்த புதிய  ‘சிக்னஸ் ரே’ ஸ்ட்ரீட் ரேலி  ஜூலை மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த புதிய ஸ்ட்டீர் ரேலி எடிஷன் 'ரேலி ரெட்' மற்றும் 'ரேசிங் புளூ' என்ற இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.  மேலும் இந்த எடிஷன் ‘வின்ட் ஸ்டைல் ஃபேரிங்’ என்ற புதிய டிசைனில் வடிமைக்கபட்டுள்ளது. இந்த ஃபேரிங் டிசைன் யமாகா எம்டி-09 என்ற வண்டியின் மாடலைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வின்ட் டிஃப்லெக்டரோடு வடிமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்போர்ட்ஸ் பைக் லுக்கில் இருக்கிறது. ஹேண்டில் பாரில் உள்ள 'நக்குள் கார்ட்' வேகமாக செல்லும்போது எதிர்காற்றிலிருந்து காத்துகொள்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் முழு டிஜிட்டல் மீட்டருடன், ஸ்போர்டியான சைட் மிரர்களை கொண்டுள்ளது புதிய சிக்னஸ் ரே.


மேலும், புதிய ’சிக்னஸ் ரே’ ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஏர் கூல் 4 ஸ்ட்ரோக், 113 சிசி இன்ஜினோடு விற்பனைக்கு வருகிறது. பிரேக்கிங் சிஸ்டத்தை பொறுத்தவரை, 170மிமி ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக் கொண்ட அலாய் வீலுடன் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய ஸ்கூட்டர். இதன் எரிபொருள் டேங்க் 21 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...