யமஹா நிறுவனம் தன்னுடைய புதிய மாடலை தைவானில் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘ஏரோக்ஸ் 155 ‘ அடிப்படையில் இயங்கும் ஃபோர்ஸ் 2.0 ஸ்கூட்டர் இதுவாகும். இது மற்ற நிறுவன ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த புதிய ‘யமஹா ஏராக்ஸ் 155’ முற்றிலும் புதிய வடிவமைப்புடன் வருகிறது. இரண்டு வண்ணங்கள் கலந்தவாறு வருகிறது. இதில் உள்ள கூர்மையான இரட்டை ஹெட்லேம்ப்ஸ் அதிக வெளிச்சம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டர்ன் இண்டிகேட்டர்களின் ‘எல்இடி’ (LED) லைட்டானது முன்பக்க பேரிங்கின் முனைகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் ‘புதிய ஏரோக்ஸ் 155 சிசி’ திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இது ‘விவிஏ’ என்று அழைக்கப்படும் ‘வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன்’ தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் காப்புரிமை யமஹா நிறுவனத்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது விவிஏ உடன் 8,000 ஆர்பிஎம்மில் 14.8 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
இதே என்ஜின் இவர்களின் முந்தைய மாடல்களான ஆர்15 வி 4 மற்றும் எம்டி 15 ஆகியவற்றிலும் உள்ளது. இது 15PS மற்றும் 13.9Nm சக்தியுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம் இதன் எரிபொருள் திறனே. மற்ற யமஹா வண்டிகளில் எரிபொருள் திறன் 36.8kmpl ஆக இருக்கும். இதில் எரிபொருள் செயல்திறனை 44.9kmpl ஆக உயர்த்தி உள்ளது யமஹா. 14 அங்குல சக்கரங்களுடன் வரும் இதில், 140 பிரிவு பின்புற டயருடன் பொருத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் எளிதில் பயன்படுத்துமாறு பல்வேறு வசதிகளை உருவாக்கி உள்ளனர். யமஹா ஏரோக்ஸ் 155ல் எல்.இ.டி ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் பொசிஷன் லேம்புகளுடன் வருகிறது. ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. சைடு ஸ்டாண்ட் கட் - ஆப், ப்ளூடூத் தொடர்புடைய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.
25 லிட்டர் அண்டர்சீட் சேமிப்பு இடத்தைக் கொண்டுள்ளது. இது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இருக்கையின் உயரம் 805 மிமீ முதல் 815 மிமீ வரை உயர்த்தி உள்ளார்கள். யமஹா ஏராக்ஸ் 155ன் முக்கிய அம்சம் 5.1 இன்ச் அளவுள்ள எல்சிடி கிளஸ்டர் ஆகும். இது இரண்டு சேனல் கொண்ட ஏபிஎஸ்சுடன் வருகிறது. யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் மாடலானது இந்தியாவில் வெளியாகுமா, இல்லையா? என்ற அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yamaha