சாதாரண ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷன்கள் தான் மேக்சி ஸ்கூட்டர்ஸ். ஸ்கூட்டர்களின் ஃபிரேமில் சக்தி வாய்ந்த என்ஜின்களுடன் ஸ்பேஸ் மற்றும் ஸ்டோரேஜை கொண்டு வருகின்றன மேக்சி ஸ்கூட்டர்கள். நம் நாட்டை பொறுத்த வரை சமீப காலமாக சற்று சக்தி வாய்ந்த மேக்சி ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் யமஹா இந்தியா நிறுவனம், ஏரோக்ஸ் 155 (AEROX 155) என்ற மேக்சி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. சொகுசான பயண உணா்வு மற்றும் உயா் செயல் திறன் கொண்ட ஒரு புதிய அனுபவத்தை தங்களது Aerox 155 Maxi வழங்கும் என்று யமஹா கூறி இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்கலாம் இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.,
மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்..
R15 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 155cc, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் தான், தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக லிக்விட் கூல்டு எஞ்சினை கொண்டு வரும் முதல் ஸ்கூட்டர் ஆகும். இதன் எஞ்சின் 14.79bhp மற்றும் 13.9Nm ஐ வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டராக இருக்கிறது.
முரட்டுத்தனமான ஸ்டைல்..
இளைஞர்களை குறி வைத்து முரட்டுத்தனமான ஸ்டைல் மற்றும் அசத்தல் லுக்கில் வெளிவந்துள்ளது யமஹாவின் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர். ஸ்போர்ட்டி ஸ்கூட்டர் ஸ்டைலிங்கை சரியாக வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரின் ட்வின் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் இதன் முன்பக்கத்திற்கு ஒரு தனித்துவ தோற்றத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் ஸ்டெப்-ஓவர் சேஸ் மற்றும் அப்ஸ்வெப்ட் டெயில் பகுதி ஸ்கூட்டருக்கு நல்ல லுக் கொடுக்கிறது.
பெரியளவிலான பூட் ஸ்பேஸ் (boot space)..
ஏரோக்ஸ் 155 மேக்சி ஸ்கூட்டர் என்பதால் யமஹா அதன் எஞ்சின் மற்றும் ஸ்டைலிங்கில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக சில பயனுள்ள அம்சங்களையும் சேர்த்தே கொடுத்துள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரில் மிகவும் பயனளிக்க கூடிய வகையில் 24.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் ஒரு ஃபுல் -ஃபேஸ் ஹெல்மெட் உள்ளிட்ட பல பொருட்களை வைத்து கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பூட் ஸ்பேஸை வழக்கும் ஸ்கூட்டராக ஏரோக்ஸ் 155 இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக Suzuki Access 125, 21.8 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜை வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்:
சீட் அல்லது எரிபொருள் மூடியைத் திறக்கும் பட்டன்களை கொண்ட மல்டிஃபங்க்ஷன் கீ ஸ்லாட்டை இந்த ஸ்கூட்டருடன் கொடுக்கிறது யமஹா. அதே போல Aerox-ன் பெட்ரோல் டேங்க் மூடியானது ஓட்டுபவரின் தொடைகளுக்கு இடையில் பொருத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் நிரப்பும் சமயத்தில் மிகவும் வசதியாக இருக்கும். சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், 14-இன்ச் அலாய் வீல்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட் லேம்ப்ஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
Also read... 7 சீட்டர் செக்மென்ட்டில் கேம் சேஞ்சராக இருக்க போகும் கியாவின் ky MPV - 2022ல் இந்தியாவில் அறிமுகம்!
ப்ளூடூத் கனெக்ஷனுடன் கூடிய LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒருமுறை கனெக்ட் செய்யப்பட்டவுடன் கால் மற்றும் டெக்ஸ்ட் அலெர்ட்ஸ் மற்றும் ஃபோன் பேட்டரி ஸ்டேட்டஸ் உள்ளிட்டவை காண்பிக்கப்படும். மறுபுறம் அந்த பயன்பாடு எரிபொருள் நுகர்வு பயன்பாடு, கடைசியாக நிறுத்தப்பட்ட இடம் மற்றும் பராமரிப்பு பரிந்துரைகள் போன்ற பல தகவல்களை காட்டுகிறது. ஸ்கூட்டர் சத்தமின்றி அமைதியாக ஸ்டார்ட் ஆவதற்கு இதில் கொடுப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் உதவுகிறது. அதே நேரத்தில் ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம், எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கிறது.
நம்பகத்தன்மை..
Aerox 155 ஐ கருத்தில் கொள்வதற்கான மற்றொரு முக்கிய காரணம் யமஹா அதன் இரு சக்கர வாகனங்களுடன் நம்பகத்தன்மையை வழங்குவதாக உறுதியளிக்கிறது. அதற்கேற்ப யமஹா நிறுவனமும் பெரிய சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் ரீச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. AEROX 155-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.29 லட்சம் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.