இந்திய வாகன சந்தையில் சற்று சக்தி வாய்ந்த மேக்சி-ஸ்கூட்டர்களுக்கான தேவை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற யமஹா நிறுவனம், மேக்ஸி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்-ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155 Maxi Sports) மற்றும் 155 சிசி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் YZF-R15 பைக்கின் புதிய வெர்ஷன் ஆகியவற்றை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய தயாரிப்புகள் இந்த மாத இறுதிக்குள் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு வரும் என்று இந்தியா யமஹா மோட்டார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்திய வாடிக்கையாளா்களுக்கு உயா் செயல் திறன், சொகுசான பயண உணா்வுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள Aerox 155 Maxi ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்று
யமஹா நிறுவனம் கூறி இருக்கிறது. சர்ப்ரைசாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள Aerox 155 Maxi ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் துவக்க விலை ரூ.1.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரேசிங் ப்ளூ மற்றும் கிரே வெர்மில்லியன் உள்ளிட்ட 2 கலர் ஆஃப்ஷன்களில் Aerox 155 Maxi கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்ட் கலர்ஸ்களுக்காக இந்த ஸ்கூட்டர் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷனிலும் கிடைக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்மாா்ட் மோட்டாா்-ஜெனரேட்டா் சிஸ்டம் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்க செய்யும். இதில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், 14-இன்ச் அலாய் வீல்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட் லேம்ப் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. CVT டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்ட,லிக்விட் -கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 4-வால்வு மோட்டார், அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.9 Nm பீக் டார்க் மூலம் 6,500rpm வரை உற்பத்தி செய்கிறது.
அதிக கம்ப்ரஷன் ரேஷியோவை அடைய இந்த எஞ்சின் ஒரு புதிய சிலிண்டர் ஹெட் மற்றும் ஒரு சிறிய கம்ப்யூஷன் சேம்ப்பரை பெற்று வாகனத்தின் எரிப்பு செயல்திறனை அதிகரிக்கிறது. ஸ்கூட்டர் சத்தமின்றி அமைதியாக ஸ்டார்ட் ஆவதற்கு இதில் கொடுப்பட்டிருக்கும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் உதவுகிறது. அதே நேரத்தில் ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம், எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கிறது. இதில் 24.5 லிட்டர் அன்டர் ஸ்டோரேஜ் இருக்கிறது.
Aerox 155 ஸ்கூட்டரானது லைட் வெயிட்டுடன், டியூப்லெஸ் டயர், 145 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், சைட்-ஸ்டாண்ட் கட் ஆஃப் , ABS உடன் முன்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் மூலம் பிரேக்கிங் சிஸ்டம் இயங்கும். ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்இடி ஹெட்லைட்கள், பயணிப்போருக்கு சிறந்த நைட்-டைம் விசிபிலிட்டியை கொடுக்கிறது. பின்புற டெயில்லைட் 12 சிறிய LED-களை கொண்டுள்ளது 3D தோற்றத்தை அளிக்கிறது மற்றும் ஸ்கூட்டரின் தோற்றத்தை சிறப்பாக காட்டுகிறது.
Also read... நடப்பாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள SUV கார்களின் பட்டியல்!
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 5.2 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், Multi-Information Display-ஆக செயல்படுகிறது. ஸ்பீடோமீட்டர், ஆர்பிஎம், விவிஏ இன்டிகேட்டர் மற்றும் ஒய்-கனெக்ட் ஆப் போன் அறிவிப்புகள், மெயின்டனன்ஸ் ரெக்கமன்டேஷன்ஸ் , கடைசியாக நிறுத்தப்பட்ட லொக்கேஷன், எரிபொருள் நுகர்வு, மால்ஃபங்ஷன் அறிவிப்பு, Revs டாஷ்போர்ட் உள்ளிட்டவற்றை இதில் பார்க்கலாம். 5.5 லிட்டர் எரிபொருள் டேங்க் இதில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.