Home /News /automobile /

2021-ஆம் ஆண்டில் குளோபல் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற இந்திய கார்களின் பட்டியல்!

2021-ஆம் ஆண்டில் குளோபல் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்ற இந்திய கார்களின் பட்டியல்!

இந்திய கார்கள்

இந்திய கார்கள்

இந்த ஆண்டில் ஆண்டில் உலகளாவிய கிராஷ் சோதனைகளில் (global crash tests) தேர்ச்சி பெற்ற சில இந்திய கார்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
2021-ஆம் ஆண்டில் அதிக இந்திய கார்கள் உலகளாவிய கிராஷ் சோதனைகளுக்கு (global crash tests- விபத்து சோதனைகளுக்கு ) உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கார்கள் தேர்ச்சி பெற்றன. மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை உலகளாவிய விபத்து சோதனைகளில் பங்கேற்றன. உலகளாவிய ஏஜென்சியால் சோதனை செய்யப்பட்ட முதல் எலெக்ட்ரிக் காராக Tata Tigor EV இருக்கிறது. இந்த ஆண்டில் ஆண்டில் உலகளாவிய கிராஷ் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற சில இந்திய கார்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700):

மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் மாடலாக கூறப்பட்ட XUV700, கடந்த நவம்பரில் அதன் அதிகாரப்பூர்வ விலை அறிமுகத்திற்கு பின் குளோபல் NCAP கிராஷ் சோதனைகளுக்கு உட்பட்டது. இந்த டெஸ்ட்டில் மஹிந்திரா XUV700, அடல்ட் நபர்களுக்கான பாதுகாப்பிற்காக 5 ஸ்டார்களையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.

இந்த கிராஷ் டெஸ்ட்டிற்கு பிறகு XUV700, மஹிந்திராவின் XUV300, தார் SUV-க்களையும் கொண்ட பாதுகாப்பான இந்திய கார்களின் எலைட் லிஸ்ட்டில் சேர்ந்தது. இந்த காரில் 7 ஏர்பேக்ஸ்கள், லேட்டஸ்ட் ஜென்ரேஷன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், கார்னரிங் லேம்ப்ஸ், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களின் சிறப்பம்சங்கள் உள்ளன. தவிர ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் போன்றவையும் உள்ளன.

ALSO READ |  நாட்டின் டாப் 10 நகரங்களில் 1 லட்சம் EV-க்களை களமிறக்க திட்டமிட்டுள்ள Zypp Electric!

டாடா பஞ்ச் (Tata Punch):

கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Motors-ன் பஞ்ச் எஸ்யூவி (Punch SUV) கார், பாதுகாப்பு என்று வரும் போது அளவு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்து உள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, Tata Punch 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று Global NCAP crash test-களில் தேர்ச்சி பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக சிறந்த ரேட்டிங்கை பெற்றுள்ளதை தவிர, குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் பஞ்ச் கார் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இதில் டூயல் ஏர்பேக்ஸ், EBD உடன் கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலுடன் கூடிய ABS, ஃப்ரன்ட் ஃபாக் லேம்ப், பெரிமெட்ரிக் அலாரம் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர்ஸ் , டயர் பஞ்சர் ரிப்பேர் கிட், பிரேக் ஸ்வே கன்ட்ரோல்உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கும்.

டாடா டியாகோ (Tata Tiago & Tigor):

பஞ்ச் எஸ்யூவியை தவிர டாடா மோட்டார்ஸின் மேலும்3 மாடல்கள் உலகளாவிய ஏஜென்சிகளின் கிராஷ் டெஸ்ட்களில் தேர்ச்சி பெற்றுள்ளன். டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் சப்காம்பாக்ட் செடான் ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் நடந்த குளோபல் என்சிஏபி கிராஷ் சோதனைகளில் 4 ஸ்டார்களை பெற்றன. டாடா மோட்டார்ஸின் சில பாதுகாப்பான கார்களாக பஞ்ச் தவிர இந்த இரண்டு கார்களும் Altroz மற்றும் Nexon உடன் இணைந்தன. Tiago மற்றும் Tigor பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 4 ஸ்டார்களையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 3 ஸ்டார்களையும் பெற்றன.

ALSO READ | டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

டாடா டிகோர் EV (Tata Tigor EV):

பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக குளோபல் என்சிஏபி ஏஜென்சியால் சோதனை செய்யப்பட்ட முதல் இந்திய மின்சார கார் என்ற பெருமையை இது பெற்றது. நாட்டின் மிகவும் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tigor EV, விபத்து சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது.

நிசான் மேக்னைட் எஸ்யூவி (Nissan Magnite SUV):

உலகளாவிய ஏஜென்சிகளால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் தேர்ச்சி பெற்ற மற்ற இந்திய கார்களில் இதுவும் அடங்கும். நிசானின் Magnite SUV ஆனது ASEAN NCAP-ல் கிராஷ் சோதனைகள் மூலம் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது.

ALSO READ |  இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் எது?

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி (Renault Triber MPV):

Global NCAP கிராஷ் டெஸ்ட்களில் ட்ரைபர் MPV 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பது அம்சத்தில் திருப்திகரமாக இருந்தாலும் குழந்தை பாதுகாப்பு சோதனையில் இது சிறப்பாக செயல்படவில்லை.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Car

அடுத்த செய்தி