சமீப காலமாக காம்பேக்ட் கார்கள் எனப்படும் கையடக்கமான கார்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. டிராஃபிக் தொல்லை, பெரிய கார் என்றால் மெயிண்டனன்ஸ், தனிப்பட்ட கார் என்றால் சிறிய கார் போதும் என்று பலரும் சிறிய கார்களை வாங்குவதில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அது மட்டுமின்றி தனித்துவமான கார்களையும் பலரும் விரும்புகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகச்சிறிய கார் ஒன்று சமீபத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சிறிய கார் என்றால், உலகிலேயே மிகச்சிறிய கார். ஒரு நபர் மட்டுமே அமர்ந்து, ஓட்டிச் செல்லக்கூடிய கார்!
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய காரின் பெயர் பீல் பி50 (Peel P50). இந்த காரின் சொந்தக்காரர் அலெக்ஸ் ஆர்ச்சின், இவர் இங்கிலாந்தில் சசெக்ஸ்ஸில் இருக்கிறார். எங்கு சென்றாலும், இந்த குட்டிக் காரில் தான் செல்வாராம் அலெக்ஸ். இவர் காரை ஓட்டும் போதெல்லாம் பார்ப்பவர்களில் பலரும் அலெக்சை கிண்டல் செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பீல் P50 காரில் ஒரு நபர் மட்டுமே அமர முடியும், அதாவது ஓட்ட முடியும். இந்த காரின் நீளம் 114 செமீ, அகலம் 92 செமீ மற்றும் இதன் உயரம் 100 செமீ ஆகும். இந்த கியூட்டான காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 42 கிமீ வரை செல்லலாம்.
எங்கு சென்றாலும் மக்கள் கவனம் தன் மீது இருக்கும், அதாவது தன் கார் மீது திரும்பும் என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தக் காரை இரு சிலர் மிகவும் அழகாக இருக்கிறது ரசிப்பார்கள், ஆனால் எவ்வளவு ரசித்தார்களோ அதே அளவுக்கு வேடிக்கையாகவும் பார்ப்பார்கள் என்று கூறினார். உலகின் மிகச் சிறந்த காராக 2010 ஆம் ஆண்டு இந்த கார் என்ன கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பிடித்தது. கார் சிறிதாக இருந்தால் என்ன, மக்கள் கிண்டல் செய்தால் என்ன, தனக்கு நல்ல மைலேஜ் தருகிறது என்று அலெக்ஸ் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
Also Read : கார் வாங்கும் பிளான் இருக்கா..? டாடா மோட்டர்ஸ் வழங்கும் அசத்தல் ஆஃபர்
டெம்போ டிராவலரின் முன்பக்கம் மட்டும் வெட்டி எடுத்து காராக மாற்றியுள்ளது போன்ற வடிவம். மேற்புற ஷீல்டை திறந்து விட்டு, ஓபன் காராக ஓட்டிச் செல்லலாம். அல்லது, தேவைப்பட்டால், மூடிக் கொள்ளலாம். இந்த குட்டிக் காரை, பீல் எஞ்சினியரின் உற்பத்தியாளர்கள் என்ற நிறுவனம், 60களின் தொடக்கத்தில் முதல் முதலில் உற்பத்தி செய்தது. அதன் பின்பு 2010 ஆம் ஆண்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மைலேஜ் முதல் கண் கவரும் வண்ணம் வரை எல்லாமே சிறப்பாக இருக்கிறதே, இந்தக் காரின் விலை என்னவாக இருக்கும்? அதிகபட்சமாக மணிக்கு 37 கிமீ வேகத்தில் செல்லும் இந்தக்காரின் விலை தான் கொஞ்சம் அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் காரின் விலை ரூ.84 லட்சம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.