டெஸ்லாவின் 24 காரட் தூய தங்க கார் - கேவியர் நிறுவனம் அசத்தல் வடிவமைப்பு!

டெஸ்லாவின் 24 காரட் தூய தங்க கார் - கேவியர் நிறுவனம் அசத்தல் வடிவமைப்பு!

டெஸ்லாவின் 24 கார

செல்போன்களை தங்கத்தால் மறுவடிவமைப்பு செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெஸ்லா காரை சுத்தமான 24 காரட் தங்கத்தைக் கொண்டு மறுவடிவமைப்பு செய்துள்ள கேவியர் நிறுவனம், தற்போது அந்த கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த கேவியர் பிராண்டு, உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக, செல்போன்களை தங்கத்தால் மறுவடிவமைப்பு செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஹெட்போன் மற்றும் செல்போன்களை தூய தங்கத்தைக் கொண்டு மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம், அந்த பொருட்களை காஸ்டிலியான விலைக்கு விற்கிறது. தற்போது அந்த நிறுவனத்தின் பார்வை டெஸ்லாவின் பக்கம் திரும்பியுள்ளது.

உலகிலேயே எலக்டிரிக் கார்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனம், மிக விலையுயர்ந்த கார்களையும் தயாரித்து வருகிறது. மல்டி மில்லியனர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப, பல்வேறு சொகுசு வசதிகளுடன் டெஸ்லா கார்களை தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தின் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால், டெஸ்லா கார்கள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் என நீங்கள் நினைத்திருந்தால், அதனை பொய்யாக்கும் வகையில் மிகவும் விலை உயர்ந்த காரை கேவியர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா எஸ்.பிளாய்ட்+ (Tesla S Plaid+) கார் மாடலை 24 காரட் தூய தங்கத்தைக் கொண்டு மறுவடிவமைப்பு செய்துள்ளது.

Also read... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க போறீர்களா? இதோ சிறந்த ஸ்கூட்டர்கள் விவரம்

மறுவடிவமைக்கப்பட்ட டெஸ்லா எஸ்.பிளாய்ட்+ காருக்கு எக்சலன்ஸ் 24k (Model Excellence 24K) மாடல் என கேவியர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. ரேடியேட்டர், கிரில் மற்றும் பம்பர்ஸ், கண்ணாடிகள் ஆகியவை சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. காரின் தங்கப்பூச்சு தொலைவில் இருப்பவரின் கண்களையும் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னட் மற்றும் ரீர் பம்பரில் தங்க கிரீடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும் இந்த மாடலில், வெறும் 99 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. டபுள் எலக்ட்ரோ பிளேடிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி காரில் தூய தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயக்கக்கூடிய இந்த கார் 200 200 MPH வேகத்தில் பறக்கும். கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ராயல் லுக்கைக் கொடுக்கிறது

1977 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த ஸ்மோக்கி அன்ட் தி பன்டிட் (Smokey and the Bandit) திரைப்படத்தில் டெஸ்லா எஸ்.பிளாய்டின் கார் கலர், இடம்பெற்றிருந்தது. ஆடம்பரம் மற்றும் பாரம்பரியமும் நிறைந்த வகையில் இருக்கும் இந்தக் கார் தொலைவில் வரும்போதே ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறது. சாமானியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பெரும் பணக்காரர்கள் மற்றும் மல்டி மில்லியனர்கள் மட்டுமே வாங்கக்கூடிய நிலையில் இருந்தாலும், 99 கார்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு கிடைப்பது கூட கொஞ்சம் கடினம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: